பொக்ரான்
பொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. பிகானீரிலிருந்தும் பொக்ரானை அடையலாம்.
புவியியல்
தொகுபொக்ரான் அமைந்த இடம்:26°55′N 71°55′E / 26.92°N 71.92°E / 26.92; 71.92.[1], சராசரி உயரம்:223 மீட்டர்கள்
இவ்விடம் மலைப்பாறைகளாலும், மணலாலும் சூழ்ந்துள்ளது, மேலும் சுற்று வட்டாரத்தில் ஐந்து உப்புக்கற்கள் கொண்ட வீச்சுகள் உள்ளன.
மக்கள் தொகை:(2001 ஆம் ஆண்டு நிலவரம்) 19,186, இதில் ஆண்கள் 55%. பெண்கள் 45%, படித்தவர்கள் 56%[2]
வரலாறு
தொகுபொக்ரான் 1440 ஆம் ஆண்டில் ராவ் மால்தேவ் உருவாக்கிய சிவந்த கல்லால் பதித்த அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய 'பால்கர்' என்ற ஒரு கோட்டைக்குப் பெயர் போனதாகும். இங்கு பாபா ராம்தேவ் நடத்தும் பிரபலமான குருகுலப் பள்ளிக் கூடமும் செயல்பட்டு வருகிறது. போக்ரானுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள ஆசாபூர்ணா ஆலையம், கீம்வஜ் மாதா ஆலயம், கைலாஸ் தெக்ரி ஆகிய இடங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பொக்ரானில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சாதல்மேர் என்ற இடம் பழம் காலத்தில் இவ்விடத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது பெருமைக்குரியதாகும். அஜ்மல் தொமரும் அவர் மகன் பாபா ராம்தேவ்ஜீயும் இங்கே ஆண்டு வந்த அரசர்களில் பிரபலமானவர்கள். மார்வார் ஜோத்பூரைச் சார்ந்த சம்பாவத் என்ற ராதோர் வம்சத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி புரிந்தனர். ஜைனர்கள் வழிபடும் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்ச்வனாதரின் ஜைன ஆலயமும் இங்கு உள்ளதனால் ஜைனர்கள் வணங்கும் ஒரு புண்ணியத்தலமாகவும் இவ்விடம் உள்ளது. சீக்கியர்கள் வழிபடும் தம்தமா சாஹிப்பின் குருத்வாரமும் புகழ் பெற்றதாகும், இங்கு குரு நானக் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
அண்மைய வரலாறு
தொகுபொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்
தொகுபொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் மேலும் ஐந்து பரிசோதனைகளை நிகழ்த்தியது. இது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கே பரிசோதனைகளை நடத்தியதாக அரசு கூறுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ^ "Falling Rain Genomics, Inc. - Map and weather data for Pokhran"
- ↑ ^ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. Retrieved 2008-11-01.
- ↑ உள் கட்டமைப்பு வசதியின்றி இருக்கும் போக்ரான்