பொட்டாசியம் இருதயோபெரேட்டு
பொட்டாசியம் இருதயோபெரேட்டு (Potassium dithioferrate) KFeS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஊதா நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையாது. இதன் வேதியியல் கட்டமைப்பைப் பொறுத்தவரை, பொட்டாசியம் இருதயோபெரேட்டின் கட்டமைப்பில் விளிம்பில் பகிரப்பட்ட எதிர்மின் அயனி FeS4 நான்முகிகள் எல்லையற்ற சங்கிலிகளைக் கொண்டுள்ளன. இந்த சங்கிலிகள் பொட்டாசியம் அயனிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன.[1] இவை MFe2S3 (M = K, Rb, Cs) வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு பரிமாணப் பொருட்களின் தொடர்புடைய குடும்பமாகும். இந்த கலப்பு-இணைதிற சேர்மங்கள் கனிமம் ராசுவுமைட்டு மூலம் குறிப்பிடப்படுகின்றன.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
12022-42-3 | |
ChemSpider | 23621924 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
FeKS2 | |
வாய்ப்பாட்டு எடை | 159.06 g·mol−1 |
தோற்றம் | அடர் ஊதா நிறத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்புத் தூள், கந்தகம் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு ஆகியவற்றை 900 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம் பொட்டாசியம் இருதயோபெரேட்டு தயாரிக்கப்படுகிறது. தரப்படுத்தப்பட்ட விகிதவியல் அளவுகளின்படி இந்த வினை பொட்டாசியம் சல்பேட்டை தயாரிப்பதற்குமான வினையாக முன்மொழியப்பட்டது.:[3]
- 6 Fe + 13 S + 4 K2CO3 → 6 KFeS2 + K2SO4 + 4 CO2
மேற்கோள்கள்
தொகு- ↑ Bronger, W.; Kyas, A.; Müller, P. (1987). "The Antiferromagnetic Structures of KFeS2, RbFeS2, KFeSe2, and RbFeSe2 and the Correlation Between Magnetic Moments and Crystal Field Calculations". Journal of Solid State Chemistry 70 (2): 262–270. doi:10.1016/0022-4596(87)90065-X. Bibcode: 1987JSSCh..70..262B.
- ↑ Mitchell, Roger H.; Ross, Kirk C.; Potter, Eric G. (2004). "Crystal Structures of CsFe2S3 and RbFe2S3: Synthetic Analogs of Rasvumite KFe2S3". Journal of Solid State Chemistry 177 (6): 1867–1872. doi:10.1016/j.jssc.2004.01.007. Bibcode: 2004JSSCh.177.1867M.
- ↑ Deutsch, John L.; Jonassen, Hans B. (1960). "Potassium Dithioferrate(III)". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 6. pp. 170–172. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132371.ch53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132371.