பொட்டாசியம் ஓசுமேட்டு
பொட்டாசியம் ஓசுமேட்டு (Potassium osmate) என்பது K2[OsO2(OH)4]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மம் ஆகும். கருஞ்சிவப்பு நிறத்தில் எதிர்காந்தப் பண்புடன் காணப்படும் , ஒலிஃபின்களின் ஒழுங்கற்ற இரு ஐதராக்சிலேற்றம்[1] வினைக்கு இவ்வுப்பு வினையூக்கியாகச் செயல்படுவதால் வேதியியலில் முக்கியத்துவம் பெற்று கவனத்தைக் கவர்கிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொட்டாசியம் ஓசுமேட்டு(VI) இருநீரேற்று
| |
இனங்காட்டிகள் | |
10022-66-9 | |
பண்புகள் | |
H4K2O6Os | |
வாய்ப்பாட்டு எடை | 368.42 |
தோற்றம் | கருஞ்சிவப்பு திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொடர்புடைய d2 அணைவுகளில் , ஆக்சோ ஈனிகள் மாறுபக்க (trans) அமைப்பில் உள்ளன[2]. Os=O மற்றும் Os-OH இடைவெளிகள் முறையே 1.75(2) மற்றும் 1.99(2) Å ஆகும். 18 எலக்ட்ரான் விதிக்கு இணங்கியுள்ள உலோக ஆக்சோ அணைவுச் சேர்மத்திற்கு இச்சேர்மம் ஒர் அரிய உதாரணம் ஆகும். 1844 ஆம் ஆண்டில் எட்மண்ட் பிரெமி என்பவரால் முதன்முதலில் பொட்டாசியம் ஓசுமேட்டு கண்டறியப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Li, Guigen; Chang, Han-Ting; Sharpless, K. Barry "Catalytic asymmetric aminohydroxylation (AA) of olefins" Angew. Chem., Int. Ed. Engl. 1996, volume 35, pp. 451-4. எஆசு:10.1002/anie.199604511
- ↑ R. K. Murmann, C. L. Barnes "Redetermination of the crystal structure of potassium trans-(dioxo)-tetra(hydroxo)osmate(VI), K2[Os(OH)4(O)2]" Z. Kristallogr. NCS 217, 2002, pp. 303–304.
- ↑ Frémy, E. "Ueber das Osmium" J. Prakt. Chem. 1844 vol.33, 406-416. எஆசு:10.1002/prac.18440330160 10.1002/prac.18440330160