பொட்டாசியம் பென்டாசல்பைடு

பொட்டாசியம் பென்டாசல்பைடு (Potassium pentasulfide) என்பது K2S5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைகிறது. இது காற்றில் விரைவாக சிதைவடையும். அறியப்பட்டுள்ள பல்வேறு பாலிசல்பைடுகளில் ஒன்றான இது M2Sn, என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது. இங்கு M = Li, Na, K மற்றும் n = 2, 3, 4, 5. என்று அமைகிறது [1]. சோடியம், பொட்டாசியம் சேர்மங்களின் பாலிசல்பைடுகள் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன.

டைபொட்டாசியம் பென்டாசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டைபொட்டாசியம் சல்பைடு, பொட்டாசியம் பாலிசல்பைடு
இனங்காட்டிகள்
12136-50-4 Y
பண்புகள்
K2S5
தோற்றம் சிவப்பு ஆரஞ்சு முப்பட்டகம்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பொட்டாசியம் சல்பைடுடன் தனிமநிலை கந்தகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் பொட்டாசியம் பொட்டாசியம் பென்டாசல்பைடு உருவாகிறது. பொட்டாசியம் ஐதரோசல்படின் தனித்துவமான சமன்பாடு இங்கு தரப்பட்டுள்ளது.

2 KHS + 1/2 S8 → K2S5 + H2S

கோணல்மாணலான S52−சங்கிலிகள் K+ அயனிகளுடன் இணைக்கப்பட்ட கட்டமைப்பினை இச்சேர்மம் பெற்றுள்ளது [2].

தோற்றம் தொகு

கந்தகவீரலின் பகுதிப்பொருட்களாக பல்வேறு பாலி சல்பைடுகள் K2S2 முதல் K2S6 வரை இதில் அழுத்த கலந்துள்ளன. சல்பைடுகள் போன்ற பாலிசல்பைடுகள் கார்பன் எஃகு, துருப்பிடிக்காத எஃகு போன்றவற்றில் அரிப்புச் சூழலில் உண்டாகும் பிளவைத் தூண்டி வளர்க்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. F. Fehér" Potassium Disulfide", "Potassium Tetrasulfide" "Potassium Pentasulfide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 361-367.
  2. Barbara Kelly and Peter Woodward (1976). "Crystal structure of dipotassium pentasulphide". Journal of the Chemical Society, Dalton Trans.: 1314–1316. doi:10.1039/DT9760001314.