பொது சமநிலைக் கோட்பாடு
பொது சமநிலைக் கோட்பாடு பல சந்தைகளின் தேவை மற்றும் அளிப்பின் இடைச்செயல்பாட்டினால் பொது சமநிலை ஏற்படும் என்று நிரூபிக்க முயல்கிறது. இந்த கோட்பாடு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் லியோன் வால்ராஷின் 1874ல் வெளியான படைப்பான எலிமென்ட்ஸ் ஆஃப் புயுர் எகோநோமிக்ஷில் (Elements of Pure Economics) முதலில் குறிப்பிடப்படுகிறது.[1]
கண்ணோட்டம்
தொகுபரவலாகப் பார்த்தால், பொதுச் சமநிலை கொட்பாடு தனிப்பட்ட சந்தைகள் மற்றும் முகவர்களிடமிருந்து தொடங்கி "கீழ்நிலை" அணுகுமுறையைப் பயன்படுத்தி முழு பொருளாதாரத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. எனவே, பொது சமநிலைக் கோட்பாடு பாரம்பரியமாக நுண் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொது சமநிலை பருப்பொருளியல் மாதிரிகள் பொதுவாக ஒரு எளிமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளன, அவை "பொருட்கள் சந்தை" மற்றும் "நிதி சந்தை" போன்ற ஒரு சில சந்தைகளை மட்டுமே உள்ளடக்குகின்றன. இதற்கு நேர்மாறாக, நுண்ணிய பொருளாதார மரபில் பொது சமநிலை மாதிரிகள் பல்வேறு பொருட்களின் சந்தைகளை உள்ளடக்குகின்றன. இம்மாதிரிகள் பொதுவாக சிக்கலானவை மற்றும் மாதிரிகளின் எண்ணியல் தீர்வுகளைக் கணக்கிட கணினிகள் தேவைப்படுகின்றன.
விலைகள் மற்றும் அந்த பொருட்களின் உற்பத்தி ஒன்றோடொன்று தொடர்புடையவை. பரோட்டா விலையில் மாற்றம், சமையல்காரரின் ஊதியம் போன்ற மற்றொரு விலையை பாதிக்கலாம். சமையல்காரரின் சுவை மற்ற கடைகளின் சுவைகளிலிருந்து வேறுபடவில்லை என்றால், பரோட்டாவின் தேவை சமையல்காரரின் ஊதியத்தில் ஏற்படும் மாற்றத்தால் பாதிக்கப்படலாம், இதன் விளைவாக பரோட்டாவின் விலை பாதிக்கப்படும். ஒரு பொருளின் சமநிலையின் விலையைக் கணக்கிடுவதற்கு, கோடி கணக்கான வெவ்வேறு பொருட்களை கணக்கிடும் ஒரு பகுப்பாய்வு தேவைப்படுகிறது.
வால்ராஷியன் சமநிலை
தொகுநியோகிளாசிக்கல் பொருளாதாரத்தில் முதலில் ஒரு முழு பொருளாதாரத்திற்கும் விலைகளை மாதிரியாகக் கொண்டுவருவதற்கான முயற்சி லியோன் வால்ராஸால் செய்யப்பட்டது . வால்ராஷின்எலிமென்ட்ஸ் ஆஃப் புயுர் எகோநோமிக்ஷ் தொடர்ச்சியான மாதிரிகளை வழங்குகிறது, ஒவ்வொன்றும் ஒரு உண்மையான பொருளாதாரத்தின் கூடுதல் அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன (இரண்டு பொருட்கள், பல பொருட்கள், உற்பத்தி, வளர்ச்சி, பணம்). வால்ராஸ் வெற்றிபெறவில்லை என்றும் இந்தத் தொடரின் பிற்கால மாதிரிகள் முரணானவை என்றும் சிலர் நினைக்கிறார்கள். [2]
குறிப்பாக, வால்ராஷின் மாதிரி ஒரு நீண்டகால மாதிரியாக இருந்தது, அதில் மூலதனப் பொருட்களின் விலைகள் உள்ளீடுகள் அல்லது வெளியீடுகளாகத் தோன்றினாலும் அவை சமமாக இருகின்றன. இலாப விகிதங்கள் அனைத்து தொழில்துறையிலும் ஒரே அளவில் பெறப்படுகின்றன. ஆனால் இது மூலதனப் பொருட்களின் அளவு தரவுகளை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது முரணாக உள்ளது. ஆனால் வால்ராஷ் தனது பிற்கால மாதிரிகளில் மூலதனப் பொருட்களை அறிமுகப்படுத்தியபோது, அவற்றின் அளவுகளை தன்னிச்சையான விகிதங்களில் கொடுத்தார். (இதற்கு நேர்மாறாக, கென்னத் அரோ மற்றும் ஜெரார்ட் டெப்ரே ஆகியோர் மூலதனப் பொருட்களின் ஆரம்ப அளவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டனர், ஆனால் அவர்க ஒரு குறுகிய கால மாதிரியை ஏற்றுக்கொண்டனர், இதில் மூலதனப் பொருட்களின் விலைகள் காலத்துடன் மாறுபடும் மற்றும் வட்டி விகிதம் பல்வேறு மூலதனப் பொருட்களில் வேறுபடுகிறது. )
20 ஆம் நூற்றாண்டின் பொருளாதார வல்லுநர்கள் பின்பற்றிய ஒரு ஆராய்ச்சி திட்டத்தை முதன்முதலில் வால்ராஷ் முன்வைத்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ McKenzie L.W. (2008) General Equilibrium. In: Palgrave Macmillan (eds) The New Palgrave Dictionary of Economics. Palgrave Macmillan, London. https://doi-org.proxy.lib.umich.edu/10.1057/978-1-349-95121-5_933-2
- ↑ Jaffe, William (1953). "Walras's Theory of Capital Formation in the Framework of his Theory of General Equilibrium". Économie Appliquée 6: 289–317.