பொது நலப் பதிவகம்

பொது நலப் பதிவகம் (Public Interest Registry) என்பது .ஆர்க் ஆள்களப் பெயரைப் பராமரித்து வரும் ஒரு ஐக்கிய அமெரிக்க இலாப நோக்கற்ற நிறுவனம். 2002ல், இணையச் சங்கம் இந்நிறுவனத்தை உருவாக்கியது. இந்நிறுவனம் பென்சில்வேனியாவில் பதியப்பட்டுள்ளது.[1] 1 சனவரி 2003 அன்று, இந்நிறுவனம் வெரிசைன் நிறுவனத்திடம் இருந்து .ஆர்க் ஆள்களத்தைச் செயற்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இணையச் சங்கத்துடன் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்பிலியாசு நிறுவனம் .ஆர்க் ஆள்களப் பெயரின் நுட்பச் செயற்பாடுகளைக் கவனித்து வருகிறது.[2]

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_நலப்_பதிவகம்&oldid=3222949" இருந்து மீள்விக்கப்பட்டது