பொன்சி முறைமை

பொன்சி முறைமை (Ponzi scheme) ஓர் செயலர், தனிநபரோ அமைப்போ, தனது சேமிப்பாளர்களுக்கு தனது இலாபத்திலிருந்து இல்லாது, புதியதாக சேர்கின்ற சேமிப்பாளர்களின் பணத்தைக் கொண்டு, பணத்தைத் திருப்பும் மோசடியான முதலீட்டு முறையாகும். இத்தகைய பொன்சி இரக செயலர்கள் பொதுவாக புதிய சேமிப்பாளர்களை, குறைந்த காலத்தில் மிகவும் கூடுதலான அல்லது வழக்கத்திற்கு மீறியதாக, கூடுதல் முதலீட்டு ஆதாயம் தருவதாக தூண்டுவார்கள்.

1920இல் இத்தகைய முறையைக் கையாண்ட சார்லசு பொன்சி

முதலில் சட்டத்திற்குட்பட்ட வணிகமாக துவங்கினாலும் திட்டம் எதிர்பார்த்த ஆதாயங்களைத் தரவியலாத நேரத்தில் பொன்சி முறையிலானதாக மோசடிக் கூறுகளுடன் மாறக்கூடும். துவக்கம் எப்படி இருப்பினும் கூடிய ஆதாயம் தர புதிய முதலீட்டாளர்களின் தொடர்ந்த பணவரவு தேவையாயிருக்கும்.[1]

1920களில் இத்தகைய முறையை பயன்படுத்திப் புகழ்பெற்ற[2] சார்லசு பொன்சியின்[3] பெயரில் இவ்வகை ஏமாற்று அறியப்படுகிறது. இத்தகைய கருத்துரு 1844இல் வெளியான சார்லஸ் டிக்கின்ஸ் புதினமான மார்ட்டின் சூசுலெவிட்டிலும் 1857 ஆண்டு புதினம் லிட்டில் டோர்ரிட்டிலும் விவரிக்கப்பட்டிருந்தாலும்[4] நிஜ உலகில் பொன்சி தான் இவ்வாறு செயல்படுத்தி மிகப்பெரும் பணத்தை ஈட்டினார். பொன்சியின் திட்டத்தில் பன்னாட்டு அஞ்சல் சீட்டுக்களை தள்ளுபடியில் வாங்கி முகமதிப்பிற்கு விற்று இலாபம் ஈட்டுவதாக இருந்தது; ஆனால் விரைவிலேயே முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு துவக்க கால முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்ப முனைந்தார்.[1]

மேற்சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "Ponzi Schemes – Frequently Asked Questions". U.S Securities and Exchange Commission. U.S Securities and Exchange Commission. 23 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Peck, Sarah (2010), Investment Ethics, John Wiley and Sons, p. 5, ISBN 978-0-470-43453-6
  3. "Ponzi Schemes". US Social Security Administration. 24 December 2008 அன்று பார்க்கப்பட்டது.
  4. Markopolos, Harry; Casey, Frank (2010), No One Would Listen: A True Financial Thriller, John Wiley and Sons, p. 50, ISBN 978-0-470-55373-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்சி_முறைமை&oldid=1723622" இருந்து மீள்விக்கப்பட்டது