சார்லசு பொன்சி
கார்லோ பீட்ரோ கியோவன்னி குயிக்லெல்மொ டெபல்டொ பொன்சி (Carlo Pietro Giovanni Guglielmo Tebaldo Ponzi, மார்ச்சு 3, 1882 – சனவரி 18, 1949), பரவலாக சார்லசு பொன்சி, இத்தாலிய வணிகரும் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏமாற்றுக் கலைஞரும் ஆவார். இவர் சார்லசு பொன்சி, கார்லோ, சார்லசு பி. பியான்சி என்ற பெயர்களில் இயங்கினார்.[1] தள்ளுபடி செய்யப்பட்ட அஞ்சல் சீட்டுக்களை பிறநாடுகளில் வாங்கி ஐக்கிய அமெரிக்காவில் அவற்றை அவற்றின் முகமதிப்பிற்கு விற்பதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு 45 நாட்களில் 50% இலாபம் அல்லது 90 நாட்களில் 100% ஈட்டித் தருவதாக உறுதிகூறினார்.[2][3] உண்மையில், பொன்சி துவக்க வாடிக்கையாளர்களுக்கு பிந்தைய சேமிப்பாளர்களின் முதலீடு கொண்டு பட்டுவாடா செய்தார். இத்தகைய முறை தற்போது "பொன்சி முறைமை" என அறியப்படுகின்றது. இவரது திட்டம் ஓராண்டுக்கு செயல்பட்டு பின்னர் மூழ்கியது; இதனால் இவரது முதலீட்டாளர்களுக்கு $20 மில்லியன் நட்டம் ஏற்பட்டது.
சார்லசு பொன்சி | |
---|---|
![]() 1920களில் பொன்சி; தனது பாஸ்டன் அலுவலகத்தில் பணிபுரிகையில் | |
பிறப்பு | கார்லோ பீட்ரோ கியோவன்னி குயிக்லெல்மொ டெபல்டொ பொன்சி மார்ச்சு 3, 1882 லூகோ, எமிலியா-ரோமாஞா, இத்தாலிய இராச்சியம் |
இறப்பு | சனவரி 18, 1949 இரியோ டி செனீரோ, பிரேசில் | (அகவை 66)
குற்றம் | பொய்யாவணம்; அஞ்சல் ஏமாற்று (கூட்டரசு), களவு (மாநில அரசு) |
தண்டனை | 3 ஆண்டுகள் 1908-1911; 5 ஆண்டுகள் கூட்டரசு (மாநிலத் தண்டனைக்கு முன்னதாக மூன்றரை ஆண்டுகள்) 1920-1922; 9 ஆண்டுகள் மாநிலம் 1927-1934; 1934இல் நாட்டை விட்டு வெளியேற்றம் |
தொழில் | நம்பிக்கை ஏமாற்று |
துணைவர் | உரோசு குனெக்கோ (1918-1937, மணமுறிவு) |
பெற்றோர் | இராபர்ட்டோ , மரியா பொன்சி |
பிள்ளைகள் | இல்லை |
பொன்சிக்கு முன்னதாக புரூக்லினில் புத்தகக்கடை வைத்திருந்த வில்லியம் எஃப்.மில்லர் 1899இல் இத்தகைய திட்டத்தை செயற்படுத்தி $1 மில்லியன் ஈட்டியிருந்தார்.[4]
மேற்சான்றுகள்தொகு
- ↑ iPad iPhone Android TIME TV Populist The Page (1931-01-05). "Business & Finance: Ponzi Payment". TIME. பார்த்த நாள் 2013-07-16.
- ↑ "Ponzi Payment", TIME magazine, January 5, 1931, December 21, 2008 அன்று பார்க்கப்பட்டது,
In 1920 thousands of gullibles had a more ornate picture of him. He was then the shrewd, straight-eyed miracle man of Boston's Hanover Street. He promised his clients a 50% profit in 45 days. ... The essence of his scheme was to buy postal reply coupons in countries with depreciated exchange, redeem them at face value for U. S.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;take
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "In Ponzi We Trust", Smithsonian magazine, December 1998, December 21, 2008 அன்று பார்க்கப்பட்டது,
Ponzi himself was probably inspired by the remarkable success of William "520 percent" Miller, a young Brooklyn bookkeeper who in 1899 fleeced gullible investors to the tune of more than $1 million.
நூற்றொகைதொகு
- Ponzi, Charles (1936), The Rise of Mr. Ponzi (Autobiography) (Public domain), ISBN 978-2-9538012-1-7
- Dunn, Donald (2004), Ponzi: The Incredible True Story of the King of Financial Cons (Library of Larceny) (Paperback), New York: Broadway, ISBN 0-7679-1499-6
- Zuckoff, Mitchell (2005), Ponzi's Scheme: The True Story of a Financial Legend, New York: Random House, ISBN 1-4000-6039-7
- The History Channel. "In Search of History: Mr. Ponzi and His Scheme". February 9, 2000. (AAE-42325, ISBN 0-7670-1672-6)
- Leila Schneps and Coralie Colmez, Math on trial. How numbers get used and abused in the courtroom, Basic Books, 2013. ISBN 978-0-465-03292-1. (Eighth chapter: "Math error number 8: underestimation. The case of Charles Ponzi: American dream, American scheme").
- Sobel, Robert (1968), The Great Bull Market: Wall Street in the 1920's, New York: Norton, ISBN 0-393-09817-6
- Kalbfleisch, John (2009), Ponzi scheme: the Montreal link., Montréal: The Gazette