பொன்னகரம் (சிறுகதை)

சிறுகதை

பொன்னகரம், புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் அன்றாடம் காய்ச்சியான ’அம்மாளு’, அடிபட்டுக் கிடந்த தன் கணவனின் பால்கஞ்சி சாப்பிடும் ஆசைக்குப் பணம் சம்பாதித்த நிகழ்வைக் கருவாகக் கொண்டுள்ளது.

கதைச் சுருக்கம் தொகு

ரயில்பாதையை ஒட்டி அமைந்திருக்கும் ஏழைகளின் ஒரு குடியிருப்புக் பகுதிக்குப் பெயர்தான் இக்கதையின் பொன்னகரம். அங்கு வசித்த பெண்கள் மில்லில் வேலை பார்ப்பவர்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையே போராட்டம்தான். இக்கதையின் கதாநயகி அம்மாளும் ஒரு மில் தொழிலாளி. அவள் கணவன் முருகேசன் சொந்தமாக ஜட்கா வண்டி (குதிரை வண்டி) வைத்திருப்பவன். அம்மாளு, முருகேசன், அவனது தாயார், அவனது தம்பி, குதிரையென மொத்தம் ஐந்துபேர் கொண்ட குடும்பம் அவர்களுடையது. சாப்பாட்டுச் செலவும் இன்ன பிறவும் இருவருடைய வருமானத்தில் தான்.

ஒருநாள் முருகேசனும் குதிரையும் குடித்துவிட்டு குஷியில் ரேஸ் விட்டதில் வண்டி கவிழ்ந்து இருவருக்கும் அடிபட்டது. அடிப்பட்ட முருகேசனின் வீக்கத்திற்கு எதையோ அரைத்துப் பூசினாள். முருகேசன் பால்கஞ்சி வேண்டுமென்று கேட்டான். கையிலோ காசில்லை; கூலி போடவும் இன்னும் இரண்டு நாள் ஆளாகும் என்ற நிலையில், புருஷனின் ஆசையை நிறைவேற்ற அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்ததுதான் இக்கதை.

குறிப்பிடத்தக்கப் பகுதிகள் தொகு

அடிமட்டத்து மக்களின் வாழ்வின் அவலமும், அறியாமையும். அதன் விளைவும் கேலியான நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது போல மேலோட்டமாகத் தோன்றினாலும் சமுதாய நிலை குறித்த கருத்துக்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன.

கதையின் சில பகுதிகள்:

பொன்னகரம் தொகு

பொன்னகரம்' (1934), அன்றைய மதராஸ் பற்றியது. இக்கதையில் நோயாளி கணவனைப் பசியாற்ற அவன் மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவது பேசப்படுகிறது. இரவில் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மதராஸ் பட்டினத்தின் இருண்ட சந்துகளில் கற்பு விலை போவதைப் பற்றிப் பேசும் புதுமைப்பித்தன் கதை முடிவில் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!' என்று விளாசுகிறார்!

பொன்னகரத்துக் குழந்தைகள் தொகு

பொன்னகரத்துப் பெண்கள் தொகு

சர்ச்சை தொகு

2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Pudumaipithan’s 2 short stories removed from Madras University curriculum
  2. "புதுமைப்பித்தனைச் சாதியத்தால் வாசித்தல்". Archived from the original on 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2014-05-06.

ஆதார நூல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னகரம்_(சிறுகதை)&oldid=3565683" இலிருந்து மீள்விக்கப்பட்டது