பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி

பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி (Mumps vaccine) பொன்னுக்கு வீங்கியைப் பாதுகாப்பாக தடுக்கிறது. பெரும்பாலோருக்குப் தடுப்பூசி போடப்படும்போது மக்கள் தொகை அளவில் இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறைகிறது.[1] 90 விழுக்காடு நபர்களுக்குத் தடுப்பூசி போடபட்டால் 85 விழுக்காடு திறன் இருக்கும். [2] நீண்ட கால தடுப்புக்கு இரண்டு கால அளவு மருந்து தேவைப்படும். ஆரம்ப கால டோஸ் 12 மாதங்களிலிருந்து 18 மாதங்களுக்குள் இருக்கும்போது பரிந்துரைக்கபடுகிறது. இரண்டாவது டோஸ் குறிப்பாக இரண்டு வயதிலிருந்து ஆறு வயதிற்குள் இருக்கும்போது கொடுக்கப்படுகிறது. [1] ஏற்கனவே நோய் எதிர்ப்பு இல்லையெனத் தெரிந்தவர்களிடயே தடுப்பூசியின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.[3]

பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி
Vaccine description
Target disease Mumps
வகை Attenuated virus
மருத்துவத் தரவு
மெட்லைன் ப்ளஸ் a601176
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07BE01
ChemSpider NA N

பாதுகாப்பு

தொகு

பொதுவாக பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் மிகவும் மிதமாகவும் கொண்டிருக்கும்.[1][3] ஊசி போட்ட இடத்தில் மிதமான வலி மற்றும் வீக்கம் இருக்கலாம், காய்ச்சல் கூட இருக்கலாம் மேலும் குறிப்பிடதக்க பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே காணப்படும்.[1] இந்த தடுப்பூசி போடுவதால் நரம்பியல் சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் போதுமான அளவு இல்லை.[3] கர்ப்பிணி களுக்கு அல்லது கடுமையான நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்கம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.[1] எனினும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் மத்தியில் விளைவுகள் ஏற்பட்டதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை.[1][3] இந்த தடுப்பூசி கோழியின் உயிரணுக்களிலிருந்து உருவாக்கபட்டிருந்தாலும் முட்டை ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடலாம் [3]

பயன்பாடு

தொகு

பெரும்பாலான வளரும் நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் நோய் தடுப்பு திட்டத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கும், மேலும் அம்மை மற்றும் மணல்வாரி தடுப்பூசி யுடன் சேர்ந்து எம் எம் ஆர் என்ற பெயரில் போடப்படும். [1] முந்தைய மூன்று தடுப்பூசிகளுடன் தட்டம்மை தடுப்பூசியும் சேர்ந்த எம் எம் ஆர் வி என்ற ஒரு தயாரிப்பும் கிடைக்கிறது.[3] 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி 110 நாடுகள் இந்த முறையில் இந்த தடுப்பூசியை வழங்குகிறது. பரவலாக தடுப்பூசி மேற்கொள்ளபட்ட பகுதிகளில் 90 விழுக்காடு வரை நோய் பரவுவது குறைந்துள்ளது. ஏறத்தாழ ஒரே வகையைச் சேர்ந்த அரை பில்லியன் அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன [1]

வரலாறு, சமூகம் மற்றும் கலாசாரம்

தொகு

பொன்னுக்குவீங்கி தடுப்பூசிக்கு முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு உரிமம் வழங்கபட்டது.[3] மேம்படுத்தபட்ட தடுப்பூசிகள் 1960 களிலிருந்து வணிக ரீதியாக கிடைக்க தொடங்கின.[1] --> ஆரம்பகால தடுப்பூசி செயல்படாததாக ஆக்கபட்டாலும் பிற்பாடு வந்த தயாரிப்புகள் பலவீனபடுத்தபட்ட உயிருள்ள நுண்ணுயிர்களாக இருந்தன.[1] இது உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ளது. ஒரு சுகாதார அமைப்பு க்குத் தேவையான முக்கியமான அடிப்படை மருந்துகளில் ஒன்று.[4] 2007 கணக்குப்படி பலதரப்பட்ட வகைகள் பயன்பாட்டிலுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Mumps virus vaccines.". Weekly epidemiological record 82 (7): 49-60. 16 Feb 2007. பப்மெட்:17304707. http://www.who.int/wer/2007/wer8207.pdf?ua=1. 
  2. Hviid A, Rubin S, Mühlemann K (March 2008). "Mumps". The Lancet 371 (9616): 932–44. doi:10.1016/S0140-6736(08)60419-5. பப்மெட்:18342688. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Atkinson, William (May 2012). Mumps Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases (12 ed.). Public Health Foundation. pp. Chapter 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780983263135.
  4. "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.