பொன்னுசாமித் தேவர்

பொன்னுசாமித் தேவர் (1837-1870) பாண்டித்துரைத் தேவரின் தந்தையாவார்.

வளர்ப்புதொகு

19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேது நாட்டை ஆண்ட இராமசாமி சேதுபதி 1830-இல் காலமானார். அதற்குப் பின்னர் சில காலம் ஆட்சி செய்த அவருடைய மனைவிக்கு வாரிசு இல்லாததால், அவருடைய தங்கை மகன் ஐந்து வயதுப் பாலகர் முத்துராமலிங்கத்தை 1847-இல் வாரிசாக ஏற்றார். அப்போது அவருடன் வந்தவர் அண்ணன் பொன்னுச்சாமி. தம்பி வயதுக்கு வரும் வரை ஆட்சிப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டு அரண்மனை நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது அவருக்கு வயது 17.[1]

பல்துறை அறிவுதொகு

தமிழ்ப் புலமையிலும், தமிழ் நூல்களை ஆதரிப்பதிலும், அரசியலறிவிலும் அவர் நிகரற்று விளங்கியதோடு சிறந்த இசை மேதையாகவும் திகழ்ந்தார்.[1]

தமிழ்ப் பணிதொகு

ஆறுமுக நாவலருடைய அனைத்து வெளியீட்டு முயற்சிகளுக்கும் இவர் உதவினார். அவருடைய நூல்களாகிய சேது புராணம், பரிமேலழகர் உரை, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம் போன்றவற்றையும் அச்சிட பொன்னுசாமித் தேவர் பொருளுதவி செய்தார். பல்வேறு புலவர்கள் பாடிய தனிப் பாடல்களைத் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயரின் துணைகொண்டு தொகுத்ததோடு, தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் வெளியிட்டார். தமிழில் வெளியான முதல் தனிப்பாடல் தொகுதி என்ற பெருமையை அது பெற்றது.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னுசாமித்_தேவர்&oldid=2717848" இருந்து மீள்விக்கப்பட்டது