பொன்னையா மாணிக்கவாசகம்

பொன்னையா மாணிக்கவாசகம் (1 ஏப்ரல் 1946 - 12 ஏப்ரல் 2023) இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் ரொய்ட்டர்சு, பிபிசி, வீரகேசரி ஆகிய ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இலங்கையில் இனப்போர் இடம்பெற்ற காலத்தில் செய்தி அறிக்கைப்படுத்தலில் துணிச்சல் மிக்க ஊடகவியலாளராக அறியப்படுகிறார்.

பொன்னையா மாணிக்கவாசகம்
பிறப்புபொன்னையா மாணிக்கவாசகம்
(1946-04-01)1 ஏப்ரல் 1946
தலவாக்கலை, இலங்கை
இறப்பு12 ஏப்ரல் 2023(2023-04-12) (அகவை 77)
வவுனியா, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிமூத்த ஊடகவியலாளர், செய்தியாளர்
அறியப்படுவதுரொய்ட்டர்ஸ், பிபிசி, வீரகேசரி செய்தியாளர்
வாழ்க்கைத்
துணை
நாகேசுவரி
பிள்ளைகள்பவித்திரா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பொன்னையா மாணிக்கவாசகம் மலையகத்தில் தலவாக்கலை, டெரிகிளேயார் தோட்டத்தில் பிறந்தவர். புனித பத்திரிசியார் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரம் வரை கற்றார். சிறிய வயது முதல் வாசிப்பு பழக்கம் கொண்டவராக விளங்கியதுடன் இவ் வாசிப்புப் பழக்கமே இவரை ஓர் ஊடகவியலாளராக வருவதற்கு உந்துதலாக அமைந்து எனலாம்.

வறுமையின் காரணமாக க.பொ.த.சாதாரண தரம் வரையே கல்வியினை இவரால் தொடர முடிந்தது. இதன்பின்பு, தலவாக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயத்தில் குறுகிய கால பணி புரிந்த அனுபவம் கொண்டிருந்தார். இதனிடையே 1965 ஆம் ஆண்டு வவுனியாவில் சென்று குடியேறினார்.

ஊடகவியலில்

தொகு

1980களில் வீரகேசரியின் வவுனியா நிருபராக இணைந்து கொண்ட இவர் இடர்படும் மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தார். வீரகேசரியின் ஆசிரியர்களான டேவிட் ராஜ், இராஜகோபால் போன்றோர் இவரது ஆரம்பகால எழுத்துக்களை செம்மைப்படுத்தியவர்களாக அறியப்படுகின்றனர். மேலும், பி.பி.சி, ரொய்ட்டர்சு செய்தி நிறுவனங்களுக்கு இலங்கைப் பிரதிநிதியாக இருந்து செய்திகளை வழங்கியுள்ளார். ஈழநாடு, தி ஐலண்ட் ஆகிய ஊடகங்களின் செய்தியாளராக பணியாற்றியதுடன் இறுதி வரை வீரகேசரி ஊடகவியலாளராகப் பணியாற்றியிருந்தார்.[1]

2022 திசம்பர் மாதம் இலங்கை பத்திரிகை நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், இலங்கை பத்திரிகை சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையின் ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் பொன்னையா மாணிக்கவாசகம் "வாழ்நாள் சாதனையாளர் விருதைப்" பெற்றிருந்தார்.[2]

யுத்த காலங்களில் பிபிசி தமிழோசைக்காக அவர் வழங்கி வந்த செய்திகள், தமிழ் மக்கள் மத்தியில் இவருடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருந்தது. செய்திகளை நடுநிலை தன்மையோடு, உள்ளதை உள்ளதாகச் சொல்லி, போர் நிலைமையையும் தமிழ் மக்களின் அவலங்களையும் உலகுக்கு வெளிப்படுத்திய ஊடகவியலாளர்.

இவரது நூல்கள்

தொகு
  • கால அதிர்வுகள்
  • வாழத்துடிக்கும் வன்னி
  • மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்
  • நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்(முற்றுப்பெறாநிலை)

மேலும், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் சிவராம் ஞாபகார்த்த மன்றமும் இணைந்து வெளியிடும் ‘தராக்கி ஈழத்தமிழ் ஊடக முன்னோடி’ நூலில் இவர் சிவராம்- தமிழ் ஊடகத்துறையினதும் அரசியலினதும் வரலாற்று நாயகன்’ என்ற சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார்.[3]

மறைவு

தொகு

பொன்னையா மாணிக்கவாசகம் 2023 ஏப்ரல் 12 அன்று அதிகாலை 12.40 மணியளவில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "இரங்கல்: மாணிக்கவாசகம் -"இலங்கை தமிழ் ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவான்"". BBC. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
  2. "Journalism Awards for Excellence 2021- 23rd edition Life Time Achievement Awards for Five Senior Journalists". Dailynews. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
  3. "மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்". yarl. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
  4. "சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னையா_மாணிக்கவாசகம்&oldid=4145800" இலிருந்து மீள்விக்கப்பட்டது