குடகு மலை
(பொன்படு நெடுவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் - (புறநானூறு 166). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். மேற்கு மலைத்தொடரில் உள்ள குடகு மலையில் மழை பொழிந்தால் காவிரியாற்றில் வெள்ளம் வரும். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்னும் பெயரும் உண்டு. தற்போதைய கர்நாடகாவில் குடகு (கூர்க்) (Coorg) என்றறியப்படுகிறது.