பொன்மலை நாதர் கோவில்
பொன்மலை நாதர் கோயில் அல்லது கனககிரீசுவரர் கோயில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேவிகாபுரத்தில் மலையின் மீதமைந்துள்ள சிவன் கோயிலாகும். சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. இது, ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 15-ஆம் நூற்றாண்டு விசயநகர அரசு காலத்தில் கோவில் விரிவாக்கப்பட்டது[1][2]
பொன்மலைநாதர்/கனககிரீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | பொன்மலைநாதர்/கனககிரீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தேவிகாபுரம் |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பொன்மலை நாதர்/கனககிரீசுவரர் |
தாயார்: | பெரியநாயகி |
வழக்காற்றுக் கூற்றுகள்
தொகு- ஒரு கிராமவாசி வனத்தில் பள்ளம் தோண்டி வேர்கள் சேகரிக்கும் போது கோடாரியின் நுனி ஒரு இலிங்கம் பட்டது. இதன் விளைவாக இந்த பாவ செயல் செய்து விட்டதாக எண்ணி அவர் விழுந்து விட்டார். அவரது ஆழ்ந்த பற்றினால் இறைவன் அவரது கனவில் தோன்றி அக்குழியினுள்ளே தான் உள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அக்கிராமவாசி இலிங்கத்தை மலை மீது வைத்து வழிபட்டான்[1].
- ஒரு பல்லவ அரசன் படை எடுத்து வரும்போது தான் வெற்றி பெற்றால் இங்கு பெரும் கோயில் கட்டுவதாக சபதம் செய்து இங்கு அவர்வெற்றி பெற்று கோவில் கட்டி வழிபட்டதாக ஒரு கதை கூறுகிறது.[1]
அமைப்பு
தொகுபல படிகள்கொண்ட மலை மேல் முதலில் வீரபத்திரர் சன்னதி. நடுப்பகுதி வழியில் ஆலடி விநாயகர் நிறுவப்பட்டுள்ளது. பாறையின் மேல் உச்சியில் வடக்குப்பகுதியில் அம்பாளின் இரண்டு கால்தடங்களும் காணப்படுகின்றன.
இக்கோவில் 140 அடி நீளம், 70 அடி அகலம் கொண்டது. இங்கு உள் பிரகாரத்தில் "நவனைகுஞ்சரம்' சிற்பம் காணப்படுகிறது. தெற்கு பிரகாரத்தில் காணப்படும் சன்னதிகள்: விசாலாட்சியம்மன், எழு கன்னியர் மற்றும் தட்சிணமூர்த்தியும், மேற்குப் பிரகாரத்தில் காணப்படும் சன்னதிகள் சிறீ விநாயகர் மற்றும் சிறீ முருகர் ஆகியவை. இக்கோயிலின் கருவறைக்குள் இரு இலிங்கங்கள் உள்ளன.