பொன்ராஜ் வெள்ளைச்சாமி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பொன்ராஜ் வெள்ளைச்சாமி (Ponraj Vellaichamy) இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமின் தனிப்பட்ட செயலாளர்(PA)பணியாற்றியவர்.[1] அப்துல் கலாம் ஐயாவின் மாற்றத்திற்கான விஞ்ஞாபனம் (Manifesto for Change) என்ற புத்தகத்தை 2014 இல் எழுதியுள்ளார்.[2]
பொன்ராஜ் வெள்ளைச்சாமி | |
---|---|
பிறப்பு | நவம்பர் 17, 1966 தோணுகால், விருதுநகர் |
பணி | இந்திய நடுவண், மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் |
அறியப்படுவது | அறிவியல் ஆலோசகர், ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
நூலாக்கப் பணிகள்
தொகுஅப்துல் கலாம் கடைசியாக எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற புயலைத் தாண்டினால் தென்றல் என்ற நூலை எழுதி முடிக்கும் பணியை பொன்ராஜ் மேற்கொண்டார்.[3]
அப்துல் கலாம் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய நூறுகோடித் துடிப்புகள் (Billion Beats) என்ற மாதாந்திர இதழின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பொன்ராஜ் பணியாற்றினார்.[4][5]
இந்தியாவின் குறிப்பிட்ட 15 மாநிலங்களின் வளர்ச்சியைத் திட்டமிட, அப்துல் கலாம் தொகுத்து வழங்கிய வளமைக்கான வழிகள் என்னும் தொகுப்பின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.[6]
அரசியல் நுழைவு
தொகுஅரசியலில் ஈடுபட்டு பணியாற்ற இருப்பதாக 27 பிப்ரவரி 2016 அன்று பொன்ராஜ் அறிவித்தார்.[7] இவர் 2021 மார்ச் 3 ஆம் நாள் அன்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ S, Saleem (19 May 2015). "Acknowledgement". USA As I Found It (1 ed.). Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9352060290.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Kalam (2014). Manifesto for change (in இத்தாலியன்). Place of publication not identified: Harpercollins India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5136-172-5.
- ↑ "Ponraj to Finish APJ's Vision TN Book". The New Indian Express. 05 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Kalam`s e-paper `billion beats` now on Facebook". பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
- ↑ "Negative reports in media prompted APJ Abdul Kalam to launch e-paper Billion Beats". One India. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
- ↑ "Jayalalithaa in the dark over power situation in Tamil Nadu: Experts". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
- ↑ "Kalam's scientific advisor enters politics". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.
- ↑ ""மக்கள் நீதி மய்யம் 120 இடங்களில் வெல்லும்" கமல் முன்னிலையில்கட்சியில் இணைந்த பொன்ராஜ்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.