பொன் நாவலன்
பொன் நாவலன் (பிறப்பு: 1953) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் சிறு வயது முதலே நாடோடி பாடல்களிலும் கிராமியப்பாடல்களிலும் நாட்டம் கொண்டமையினால் தாமும் அதுபோல் பாடல்கள் எழுதவேண்டும் என்ற உந்துதலில் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியிடம் கவிதை பயின்றார், பின்பு 'நாகப்பன்' என்ற தனது பெயரை 'பொன் நாவலன்' என்று மாற்றிக் கொண்டார்
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். மறைந்த உவமைக்கவிஞர் சுரதாவின் தீவிரப் பற்றாளர். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
தொகு- புதுமைக் கவிஞர் பொன் நாவலன் கவிதைகள்
- கரும்பும் கண்ணீரும்
- பொன் விடியல்
பரிசுகளும் விருதுகளும்
தொகு- வானொலி, தொலைக்காட்சி, மேடை கவியரங்கங்களில் பங்கு பெற்று பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார்
- சமூகக் கலைமணி சா. ஆ. அன்பானந்தன் விருது - மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம், 2004