பொரிக்கோழி

பொரிக்கோழி[1] (Plymouth Rock chicken) அல்லது பிளைமொத்ராக், பிளெபத்ராக், பிளிமோத்ராக் என பல வகையாக அழைக்கப்படுவது ஒரு அமெரிக்க நாட்டுக் கோழி இனமாகும். இது முதலில் மாசச்சூசெட்ஸ் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்டது, அதன்பிறகான இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் பெரும்பகுதியில் மிகவும் பிரபலமான கோழி இனமாக ஆனது. இது இறைச்சி மற்றும் அதன் பழுப்பு நிற முட்டைகள் என இரட்டை நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்ட இனம் ஆகும். இது, குளிரிலும் வளர்க்க எளிதானதாகவும், மற்றும் நல்ல அடைகாக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. [2]

பொரிக்கோழி
பொரிக்கோழி தலை

விளக்கம்

தொகு

இக்கோழி வெள்ளை கருப்பு நிறமான இறகுகளை உடையது. காண்பதற்கு வரிக்குதிரை போல வெள்ளையும், கருப்பும் கலந்து வரிவரியாக இருக்கும். இதன் கால்கள் கனத்து குறுகியதாக இருக்கும். இதன் தலையில் உள்ள கொண்டை வெளிறிய சிவப்பாக இருக்கும். இதன் அலகு மற்ற கோழிகளைவிட சற்று பெரியதாக இருக்கும். இதனால் உயரப் பறக்க முடியாது. இவை வெகு விரைவாக வளரக்கூடியன.

மேற்கோள்கள்

தொகு
  1. கோழி வளர்ப்பு (நூல்), ஆசிரியர் எஸ். ஏ. சூசை ராஜா, ராமன் பதிப்பகம், சென்னை 18, பதிப்பு 1968, பக்கம் 9
  2. "PLYMOUTH ROCK CHICKEN". கட்டுரை. https://web.archive.org/web/20161010131233/http://livestockconservancy.org/index.php/heritage/internal/plymouthrock. Archived from the original on 2016-10-10. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரிக்கோழி&oldid=3484304" இலிருந்து மீள்விக்கப்பட்டது