பொறி. பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி

பொறி. பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி (Er. Perumal manimekalai Engineering College) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒசூருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 7 இல் உள்ள கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.[1]

பொறி. பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2002
முதல்வர்எஸ். சித்ரா
அமைவிடம், ,
வளாகம்ஊரகம்
சுருக்கப் பெயர்பி. எம். சி . டெக்
சேர்ப்புதன்னாட்சி
இணையதளம்http://www.pmctech.org/

இக் கல்லூரி 2002 இல் பி. எம். சி. டெக் கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி ஆகும்.

இருப்பிடம்

தொகு

பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனங்களின், வளாகம், தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர்-கிருஷ்ணகிரி நகரங்களுக்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை எண்-7ஐ ஒட்டி உள்ளது. இந்நிறுவனம் ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் ஒசூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து 51 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ஆகும்.

நிறுவனம்

தொகு

இது பொறி. பெருமாள் மணிமேகலை தெலுங்கு சிறுபான்மை கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும். இது புது தில்லி சிமிசிஷிணி அங்கீகாரம் கொண்ட கல்லூரி ஆகும்.

படிப்புகள்

தொகு

இங்கு இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பில் (பி. இ), சிவில், சிஎஸ்சி, இசிஇ, இஇஇ, இ&ஐ, மெக்கானிக், மெக்கட்ரானிக்ஸ், பி.டெக், ஐடி படிப்புகளும், முதுநிலைப் பொறியியல் படிப்புகளாக (எம். இ) எம். இ ஏரோனேடிகல் போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.


குறிப்புகள்

தொகு
  1. "ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா". செய்தி. தினமணி. 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2017.