பொறையன் பெருந்தேவி

பொறையன் பெருந்தேவி என்பவள் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் மனைவி. இவளது தந்தை பெயர் 'ஒருதந்தை'. பதிற்றுப்பத்து. ஏழாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இவளது மகன்.[1] இவளது பெயர் தெரியவில்லை. கணவன் பொறையன். எனவே 'பொறையன் பெருந்தேவி' எனக் குறிப்பிடுகின்றனர். கோவலனைக் கொன்ற பாண்டியன் மனைவியைக் 'கோப்பெருந்தேவி' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதை நினைவுகூரலாம்.

அடிக்குறிப்பு

தொகு
  1. பதிற்றுப்பத்து, பதிகம் 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறையன்_பெருந்தேவி&oldid=2565011" இலிருந்து மீள்விக்கப்பட்டது