பொலநறுவை வேளைக்காரர் கல்வெட்டு
பொலநறுவை வேளைக்காரர் கல்வெட்டு இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. இது 1903ல் எச். சி. பி. வெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 49 வரிகளில் எழுதப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேளைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது.[1]
காலம்
தொகுஇக்கல்வெட்டை ஆய்வு செய்த வரலாற்றாளர்கள் இதன் காலம் குறித்து வேறுபாடான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். டி. எம். டி இசட் விக்கிரமசிங்க என்பவர் இது 1116ல் முதலாம் விஜயபாகுவின் ஆட்சி முடிந்து 20-30 ஆண்டுகள் கழிந்த பின்னரே இக்கல்வெட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால், இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாத ஆர். ஏ. எல். எச். குணவர்தன பல்வேறு காரணங்களைக் காட்டி இக்கல்வெட்டு கஜபாகு காலத்துக்குப் பின்னரும், அவனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் விக்கிரமபாகு அதிகாரம் பெற முன்பும் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்.[2]
உள்ளடக்கம்
தொகுராசகுருவான "உத்தொருள்மூளை"யின் தலைவரும், அரசனின் அமைச்சர்கள் சிலரும் வேண்டிக்கொண்டதன் பேரில், தளதாய்ப் பள்ளியின் பாதுகாப்புக் குறித்து வேளைக்காரர் செய்த ஏற்பாடுகள் குறித்து இக்கல்வெட்டுப் பதிவுசெய்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.