போகன் ஈடே
போகன் ஈடே (Boken Ete) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஓர் அரசு ஊழியராகவும் அறியப்படுகிறார். அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
போகன் ஈடே Boken Ete | |
---|---|
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1978–1980 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | தும்பக் ஈடே |
தொகுதி | அலோங்கு தெற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1922 |
இறப்பு | 8 சனவரி 2020 | (அகவை 97)
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபோகென் ஈடே 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று மேற்கு சியாங்கில் உள்ள பெனேயில் பிறந்தார்.[1] 1944 ஆம் ஆண்டில் தொழிலாளர் படைப்பிரிவு முகமையின் உறுப்பினராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இவ்வமைப்பில் பல்வேறு பதவிகளில் இவர் பணியாற்றினார்.[3]
1950 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பத்திற்குப் பிறகு போகன் ஈடே செய்த நிவாரணப் பணிகளுக்காக அசாம் மாநில ஆளுநரின் பூகம்ப நிவாரண நிதி பதக்கம் வழங்கப்பட்டது.[2] 1958 ஆம் ஆண்டில் அசாம் ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழும், 1978 ஆம் ஆண்டில் கப்பற் படையின் ஆளுநர் பாராட்டுச் சான்றிதழும் இவருக்கு கிடைத்தன.[1] 1978 ஆம் ஆண்டில் அலோங்கு ன்தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளராக அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
போகென் ஈடே 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் தேதியன்று தனது 97 ஆவது வயதில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Ex-MLA Boken Ete passes away". The Assam Tribune. 9 January 2020. Archived from the original on 21 May 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.
- ↑ 2.0 2.1 "Former MLA Boken Ete no more". The Arunachal Times. 10 January 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.
- ↑ 3.0 3.1 "Guv, CM & speaker lead state in mourning ex-MLA Ete's demise". Arunachal Observer. 10 January 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.
- ↑ "Arunachal Pradesh Assembly Election Results in 1978". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 December 2019.