அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஒருமித்த ஓரவை சட்டமன்றமாகும். மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் சட்டப்பேரவையின் அமர்வு உள்ளது. சட்டப் பேரவையானது 60 சட்டப் பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கியது,[1] ஒரு உறுப்பினர் தொகுதிகளில் இருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை
10வது அருணாச்சல பிரதேச பேரவை
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
பேரவைத் தலைவர்
பசாங் டோர்ஜி சோனா, பா.ச.க.
மே 2019 முதல்
துணை பேரவைத் தலைவர்
டேசம் போங்டே, பா.ச.க.
மே 2019 முதல்
அவைத் தலைவர்
(முதலமைச்சர்)
அவை துணைத் தலைவர்
(துணை முதலமைச்சர்)
எதிர்க்கட்சித் தலைவர்
காலி
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்
அரசு (59)

எதிர்கட்சி

காலியிடம்[a]

மற்றவை (1)

     இ. தே. கா (1)
தேர்தல்கள்
First past the post
அண்மைய தேர்தல்
19 ஏப்ரல் 2024
அடுத்த தேர்தல்
2029
கூடும் இடம்
சட்டமன்றக் கட்டிடம், இட்டாநகர், அருணாசலப் பிரதேசம்
வலைத்தளம்
arla.neva.gov.in

வரலாறு

தொகு

29 திசெம்பர் 1969 அன்று, அசாம் ஆளுநரை தலைவராகக் கொண்டு, வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (இன்றைய அருணாச்சலப் பிரதேசம்) ஆளுகைக்கான உச்ச ஆலோசனைக் குழுவான முகமை சபை நடைமுறைக்கு வந்தது. முகமை சபை 1972 அக்டோபர் 2 இல் பிரதேச சபையால் மாற்றப்பட்டது. 15 ஆகத்து 1975 இல் பிரதேச சபை தற்காலிக சட்டப் பேரவையாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில், சட்டப் பேரவை 33 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது, அதில் 30 உறுப்பினர்கள் நேரடியாக ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 3 உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர்.[2]

பதவிகள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள்

தொகு

தற்போதைய பேரவை அருணாசலப் பிரதேசத்தின் பத்தாவது சட்டப் பேரவையாகும்.

பதவி பெயர்
ஆளுநர் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்
பேரவைத் தலைவர் பசாங் டோர்ஜி சோனா
துணை பேரவைத் தலைவர் டேசம் போங்டே
அவைத் தலைவர் (மாநில முதலமைச்சர்) பெமா காண்டு
எதிர்க்கட்சித் தலைவர் காலி

இவற்றையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. No official opposition because no political party obtained at least 10% of the seats in the assembly

மேற்கோள்கள்

தொகு
  1. "Arunachal Pradesh Legislative Assembly". Legislative Bodies in India website. பார்க்கப்பட்ட நாள் 29 January 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Arunachal Pradesh Legislative Assembly-Introduction" (PDF). Legislative Bodies in India website. Archived from the original (PDF) on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 29 January 2011.

வெளி இணைப்புகள்

தொகு