போகேஸ்வரி ஃபுக்கானனி
போகேஸ்வரி ஃபுக்கானனி (1885 - 20 - 21 செப்டம்பர் 1942 [1][2] ) என்பவர் பிரிட்டித்தானிய இந்தியப் பேரரசின் ஆட்சியை எதிர்த்த இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு செயற்பாட்டாளரும், விடுதலைப் போராட்ட வீராங்கனையும் ஆவார்.
இந்திய சுதந்திர இயக்கத்தில்
தொகுபோகேஸ்வரி 1885 இல் அசாமில் உள்ள நாகாமோ மாவட்டத்தில் பிறந்தார்.[1] இவர் போகேஸ்வர் ஃபூகானை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு ஆறு மகன்ளும், இரண்டு மகள்களுமாவர்.[1] இவர் எட்டு பிள்ளைகளுக்குத் தாயாகவும், குடும்பத் தலைவியாகவும் இருந்த போதிலும்,[2] வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள பெர்ராம்பூர், பாபஜியா மற்றும் பார்புஜியா பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டார். மேலும் இந்திய தேசிய காங்கிரசிசுக்கு அலுவலகங்களை நிறுவ உதவினார்.[1] 1930 ஆம் ஆண்டில் போகேஸ்வரி பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறவழியிலான பேரணிகளில் கலந்துகொண்டார்.[1]
இறப்பு
தொகுஇந்திய விடுதலை இயக்கத்தின் போது, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அகிம்சையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் போகேஸ்வரி ஈடுபட்டார். 1942 இல் பெர்ராம்பூரில் இருந்த இந்திய தேசிய காங்கிரசின் அலுவலகமானது பிரித்தானிய அதிகாரிகளால் கைப்பற்றி பூட்டப்பட்டது.[2] காங்கிரசு அலுவலகத்தை மீண்டும் திறக்கும் முயற்சிக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் போகேஸ்வரியும், அவரது மகன்களும் கலந்துகொண்டனர்.[1][2] அலுவலகத்தின் மறு திறப்பு விழாவானது 18 செப்டம்பர் 18 அன்று,[1] அல்லது இரண்டு நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்டது.[2] பிரித்தானிய அரசானது திறக்கப்பட்ட காங்கிரசு அலுவலகத்தை மீண்டும் மூட ஒரு பெரிய படையை அனுப்பியது.[1][2]
போகேஸ்வரி மரண நிகழ்வு குறித்து இரண்டு கூற்றுகள் உள்ளன. முதல் கூற்றின்படி, போகேஸ்வரியும், ரத்னலா என்பவரும் சுற்றியுள்ள கிராமங்களிடமிருந்து வந்த பலருடன், இந்திய தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு வந்தே மாதர முழக்கத்தை எழுப்பியபடி வந்தனர்.[2] இவர்களைத் தடுத்த காவல் படையினரை எதிர்த்துப் பேரணியினர் போராடினர். காவல் படையினருக்கு தலைமைத் தாங்கிய பிரித்தானிய இராணுவத் தலைவரான "ஃபினிஷ்" என்பவர் ரத்னாலாவிடம் இருந்து தேசியக் கொடியைக் கைப்பற்றினார். பின்னர் அக்கொடியை அவர் அவமதித்தார். இதனைக் கண்ட போகேஸ்வரி தன் கையில் இருந்த கொடிக்கம்பால் இராணுவத் தலைவரைத் தாக்கினார்.[1] மற்றொரு கூற்றின்படி, கூட்டமானது காங்கிரசு அலுவலகத்தைத் திறக்க கூடியபோது அதைத் தடுக்க பிரித்தானியக் காவலர்கள் அங்கு வந்தனர் அப்போது அங்கு போகேஸ்வரி இல்லை. ஆனால் பின்னர் போகேஸ்வரி வந்தபோது பிரித்தானிய இராணுவத் தலைவரான "ஃபினிஷ்" என்பவர் கூட்டத்தினரையும் போகேஸ்வரியின் மகன்களையும் துப்பாக்கியால் சுட குறிபர்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். இதையடுத்து அவர் அந்த பிரித்தானிய அதிகாரியை கொடிக் கம்பால் தாக்கினார். இதையடுத்து காவலர்களால் போகேஸ்வரி சுட்டுக் கொல்லப்பட்டார்.[1][2]
1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு மருத்துவமனைக்கும், ஒரு உள் விளையாட்டு அரங்கிற்கும் இவரின் பெயர் சூட்டப்பட்டது. இவர் பெயர் சூட்டப்பட்ட மருத்துவமனையானது 1854 இல் அசாமின் நாகான் நகரில், அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரி மைல்ஸ் பிரன்சோனஸ் என்பவரால் நிறுவப்பட்டது ஆகும். இந்த மருத்துவமனைக்கு பின்னர் போகேஸ்வரி ஃபுக்கானானி பொது மருத்துவமனை என மறு பெயர் இடப்பட்டது.[3][4] அஸ்சாம் மாநிலத்தில் உள்ள குவகாத்தி நகரில் இவர் பெயரிலான உள் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது.[5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Pathak, Guptajit (2008). Assamese Women in Indian Independence Movement. Mittal Publications. Archived from the original on 2017-11-07.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Singh, Daya Nath (2 October 2008). "Assamese women in India's freedom movement". Assam Times. Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
- ↑ "154-year-old hospital to get a dose of renovation". The Telegraph. 3 December 2008. Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Bhogeswari Phukanani Civil Hospital". Archived from the original on 16 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
- ↑ "Bhogeswari Phukanani Indoor Stadium". The Assam Tribune. 14 October 2017. Archived from the original on 20 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)