போசியா சூம்ரோ

போசியா சூம்ரோ ( Fozia Soomro) (1966-2002) இவர் ஓர் சிந்தி நாட்டுப்புற பாடகராவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவரது பிறந்த பெயர் ஹக்கீமன் என்பதாகும். மேலும் இவர் பாடகர் பாடகர் ஹாஜி நாது சூம்ரோவின் மகள் ஆவார். வாழ்க்கைத் தேவைகளுக்கான வளங்கள் இல்லாததால்,தான்டோ முகம்மது கான் என்ற இடத்திற்கு இவரது குடும்பம் இடம் மாற்றப்பட்டனர். அங்கு இவர் தனது சிறு வயதிலேயே பாடத் தொடங்கினார். [2]

பாடும் தொழில்

தொகு

தனது பதினாறாவது வயதில், இவரது குடும்பத்தினர் மத எண்ணம் கொண்டவர்களாக இருந்ததால், கூட்டங்களில் ரகசியமாகப் பாடத் தொடங்கினர். "கத்ரா கத்ர் நா கயீ கோ & சேட் வாய் சதே வாய் சதி சுகான் ஜா என்ற தனது இரண்டு பாடல்களைப் பதிவு செய்த நசீர் மிர்சாவின் முயற்சியால் வானொலி பாக்கித்தானில் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் இவரது பெயர் சிந்து மாகாணத்தின் ஒவ்வொரு மூலையில் அடைந்தது. இவரது பாடல்கள் சிந்து மக்கள் அனைவருக்கும் செல்வமனது. தார்பார்க்கர் பாலைவனத்தின் மொழி மீதான தனது அன்பை நிரூபிக்க இவர் பல தாரி மற்றும் மார்வாரி பாடல்களைப் பாடினார். இசைத்தட்டு நிறுவனங்களும் இவரது படைப்புகளை வெளியிட்டன. நிகழ்ச்சிகள், கட்சிகள், பிறந்த நாள், திருமணங்கள் மற்றும் பிற கூட்டங்களுக்காக இவரது நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டது. உஸ்தாத் மஜீத் கான் மற்றும் குலாம் உசேன் காலேரி ஆகியோர் இவருக்கு இசை ஆசிரியர்களாக இருந்தனர். இவர் தேசபக்தியை அடிப்படையாகக் கொண்ட பல பாடல்களைப் பாடினார். மேலும் பாக்கித்தானின் முன்னாள் பிரதம மந்திரி பெனாசிர் பூட்டோ மீது மிகுந்த மரியாதைக் கொண்டிருந்தார். [3] இவரது எண்ணற்ற இசைத் தட்டுகள் இவரது புகழுக்கு சான்றாகும். அதில் இவர் வெவ்வேறு கவிஞர்களின் காதல் பாடல்களை குறிப்பாக பிலாவால் ஓத்தோ மற்றும் அலி முகமது உதராய் ஆகியோரின் பாடலகளை பாடியுள்ளார். [4] தார் மக்கள் இவரது பாடல்களையும் பிற நாட்டுப்புற பாடகர்களையும் கேட்க தங்களுக்கென தனியே ஒரு வானொலி நிலையத்தை கோரினர். [5]

விருதுகள்

தொகு

இவர் ஷா லத்தீப் விருதைப் பெற்றுள்ளார். [6]

இறப்பு

தொகு

2002 செப்டம்பர் 4, அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக இவர் இறந்தார். இவர், சிந்துவின் தான்டோ முகம்மது கான் என்ற ஊரில் சக்தி புர்ஹான் ஷா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. Sahito, Abdul Wahab (22 September 2013). "سنڌي شخصيتون: حڪيمان عرف فوزيه سومرو - شهاب نهڙيو".
  2. "فوزيه سومرو : سنڌي راڳ جي مشهور گلوڪاره". Archived from the original on 2022-10-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  3. نارائن باریٹھ بی بی سی ، جے پور (1970-01-01). "BBC Urdu - ‮نڈیا‬ - ‮راجستھان میں بینظیر کے نغمے‬". Bbc.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-04.
  4. Book: Legends of Modern Sindh, written by Prof: Hassan Bux Noonari, Published by Roshni Publications 2015, Page: 99
  5. "Appeal for powerful radio station in Thar". 6 July 2009.
  6. "Sindhi Adabi Board Online Library (Stories)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசியா_சூம்ரோ&oldid=3701539" இலிருந்து மீள்விக்கப்பட்டது