போடுலினம் மருந்துப் பொருள்
போடுலினம் மருந்துப் பொருள் என்பது ஒரு நியூரோடாக்சிக் புரதம் ஆகும். இது பாக்டீரியம் கிளாஸ்ட்ரிடியம் பொட்டுலினம் மற்றும் அவை தொடர்புடைய இனங்களால் உருவாக்கப்படுகின்றன. [1] மருத்துவத் தேவைகள், அழகுப் பொருட்கள் மற்றும் ஆராய்ச்சி தேவைகளுக்காக இவை உருவாக்கப்படுகின்றன. இதில் போடுலினம் மருந்துப் பொருள் ஏ மற்றும் போடுலினம் மருந்துப் பொருள் பி என இருவகைகள் உள்ளன.[2] இதனால் பாதிக்கப்பட்டால் கிளாஸ்டிரிடியம் நச்சேற்றம் ஏற்படும்.
இதுவரை அறியப்பட்ட மருந்துப் பொருள்களில் மிகவும் அபாயகரமான இந்த நஞ்சானது, உடலுக்குள் 1.3 – 2.1 என்ஜி/கிலோ சிரைகளின் வழியாகவோ, தசைகளின் வழியாகவோ மற்றும் 10 – 13 என்ஜி/கிலோ சுவாசித்தலின் வழியாகவோ செல்லும்போது இறப்பு ஏற்படும்.[3]
இதன் ஏ மற்றும் பி வகைகள் மருத்துவ தேவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ உதவிகள் தவிர அழகுப் பொருட்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க அரசு இது தொடர்பாக உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் மூலம் இதனை ஊசி அல்லது பிறவற்றின் மூலமாக பரவ விடாமல் தடுக்கின்றனர். இதனை முறையற்றவாறு பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும்.[4][5] ஆனால், இவை பிற வணிக பயன்பாடுகளில் போடோக்ஸ் என்ற பெயருடன் பயன்பட்டு வருகின்றன.
போடுலினம் ஊசி
தொகுபோடுலினம் ஊசி என்பது வயது முதிர்தலைத் தடுக்கும் பயன்பாடுகளில் மருத்துவத் துறையில் உதவுகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் முகத்தின் சுருக்கங்களைக் குறைக்கவும், வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்யவும் இந்த மருத்துவ ஊசி செயல்முறை பயன்படுகிறது. ஆனால் இவற்றினை தகுதிபெற்ற மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.[6]
செயல்பாடு
தொகுகிளாஸ்டிரிடியம் போடுலினம் பாக்டீரியாவினால் உருவாக்கப்படுகிறது. இதில் மிகச்சிறிய அளவு ஊசியின் மூலம் உடலில் செலுத்தப்படும்பொழுது, அது தசைகள் சுருங்குவதற்கான உடல் சமிக்ஞைகளைத் தடுக்கிறது. இதன் விளைவு சிறிது காலம் மட்டுமே, அதுவும் சிறிதளவு மட்டுமே தசைகளை பலவீனமாக்கும். இது சருமம் மிருதுவாகவும் அல்லது சுருக்கங்களை நீக்கி புதிய சரும வரிகளை உருவாக்கவும் உதவும்.
இந்த போடுலினம் மருத்துவ ஊசி முழுவதுமாகச் செயல்பட 15 முதல் 20 நிமிடங்கள் வரை காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே செயல்படத் தொடங்கிவிடும்.
குணப்படுத்தும் பகுதிகள்
தொகுஇந்த மருத்துவச் செயல்முறையினை வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமென்றாலும் செலுத்தலாம். இதனை செயல்படுத்தும்போது கீழ்க்கண்ட உடற்பகுதிகள் மற்றும் சருமப் பிரச்சினைகள் குணப்படுத்தப்படுகின்றன.
1. புருவங்களுக்கிடைப்பட்ட சிறிய வரிகள்
2. நெற்றியில் ஏற்படும் கிடைமட்ட கோடுகள்
3. புருவங்களின் சமச்சீரின்மை
4. கண்களைச் சுற்றி தோன்றும் புன்னகைக் கோடுகள்
5. கண்கள் சோம்பேறித்தனமாகத் தோன்றுதல்
6. பொம்மைகளைப் போன்று முகத்தில் உள்ள வரிகள்
7. கிடைமட்ட கழுத்து வரிகள்
8. செங்குத்து கழுத்து பட்டைகள்
9. மூக்கில் ஏற்படும் கோடுகள்
கைக்கு அடியில் மற்றும் உள்ளங்கையில் அதிகப்படியாக வியர்வை ஏற்படுவதையும் இந்த சிகிச்சையின் உதவியினால் குணப்படுத்த இயலும். சருமத்தின் மேலடுக்கில் உள்ள தோலானது இந்த சிகிச்சையில் இடம்பெறுவதால், வியர்வை சுரப்பிகளில் இது மாற்றத்தினை ஏற்படுத்தவல்லது. அத்துடன் இந்த விளைவு ஆறு மாத காலத்திற்கு நீடித்திருக்கும்.
அபாயகரமானது
தொகுஇந்த மருத்துவ சிகிச்சை முறையினால் அனைத்து முகச் சுருக்கங்களையும் குணப்படுத்த இயலாது. இந்த போடுலினம் மூலம் சரிசெய்ய முடியாத சில பின்வருமாறு:
1. சூரியனின் கதிர்வீச்சினால் உருவாகக் கூடிய நிலையான சுருக்கங்கள் (இவை அனைத்து நேரங்களிலும் தென்படும்) 2. ஆழமான சுருக்கங்கள் 3. முகத்தின் அடிபாக தசையில் இருக்கும் கோடுகள் 4. மிகவும் கீழே அமையும் கிடைமட்ட நெற்றி கோடுகள்
பொருளாதாரம்
தொகு2013 இன் படி, போடுலினம் மருத்துவ ஊசியானது, அழகுபடுத்துதலில் மிக முக்கியமான சிகிச்சை முறையாக வளர்ந்து வருகிறது. இதில் 6.3 மில்லியன் செயல்முறைகள் அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது. இதனை அமெரிக்கன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சமூகம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ முறைக்கு தகுதியான மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை நாடு, மாநிலம் மற்றும் இடங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த வகையான ஒப்பனை வழங்குநர்களில் சரும நிபுணர்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அழகியல் நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
போடுலினம் மருத்துப் பொருள் உலகளவிலான சந்தையில் அழகுப் பொருளுக்கான பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதன் பயன்பாட்டு மதிப்பு சுமார் 2.9 பில்லியன் டாலர்களை 2018 ஆம் ஆண்டில் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக அழகுக்காக இது பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில் இதன் மதிப்பு அதே கால இடைவெளியில் 4.7 பில்லியன் டாலர்களாக இருக்கும் (அமெரிக்காவில் 2 பில்லியன் டாலர்கள்) என எதிர்பார்க்கப்படுகிறது.[7]
பாதுகாப்பு
தொகுஇந்த மருத்துவ செயல்முறை மிகவும் பாதுகாப்பானது. அழகு மற்றும் ஒப்பனைத் துறையில் பல ஆண்டுகள் இவற்றினைப் பயன்படுத்த முடியும். ஒப்பனை மற்றும் அழகியல் வல்லுனர்கள் கொடுக்கும் முறையான சிகிச்சை முறைகளினால் முழுத் திருப்தியுடன் கூடிய, பக்க விளைவில்லாத சருமம் கிடைக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ Montecucco C, Molgó J (2005). "Botulinal neurotoxins: revival of an old killer". Current Opinion in Pharmacology 5 (3): 274–279. doi:10.1016/j.coph.2004.12.006. பப்மெட்:15907915.
- ↑ American Society of Health-System Pharmacists (October 27, 2011). "Botulinum Toxin Type A". drugs.com. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
- ↑ Arnon, Stephen S.; Schechter R; Inglesby TV; Henderson DA; Bartlett JG; Ascher MS; Eitzen E; Fine AD et al. (February 21, 2001). "Botulinum Toxin as a Biological Weapon: Medical and Public Health Management" (PDF, 0.5 MB). Journal of the American Medical Association 285 (8): 1059–1070. doi:10.1001/jama.285.8.1059. பப்மெட்:11209178. http://jama.ama-assn.org/cgi/reprint/285/8/1059.pdf.
- ↑ FDA Notifies Public of Adverse Reactions Linked to Botox Use. Fda.gov. Retrieved on 27 February 2016.
- ↑ FDA Gives Update on Botulinum Toxin Safety Warnings; Established Names of Drugs Changed, FDA Press Announcement, August 3, 2009
- ↑ "Botox Injection". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
- ↑ Chapman, Paul (May 10, 2012). "The global botox market forecast to reach $2.9 billion by 2018". Archived from the original on 6 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)