போடோலாந்து மக்கள் முன்னணி

போடோலாந்து மக்கள் முன்னணி இந்தியாவின், அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். இதன் தலைமையிடம் கோக்ராஜ்கர் நகரம் ஆகும் மேலும் போடோலாந்து தன்னாட்சி பகுதியை ஆளுகிறது. போடோலாந்து மக்கள் முன்னனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் ஆகும். அசாம் ஆட்சியை இவ்விரு கட்சிகள் கூட்டணி அமைத்து 2016 ஆம் ஆண்டு கைப்பற்றியது.[2] 2011 ஆம் ஆண்டு நடந்த அசாம் சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களைப் பெற்றது. ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது பின் தன் நிலைப்பாட்டை மாற்றி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோதி போடோலாந்து தன்னாட்சி பகுதியை பார்வையிட்டு தலைமை இடம் கோக்ராஜ்கர் நகர் அலுவலகத்தில் 1000 கோடி நிதியுதவி போடோலாந்து தன்னாட்சி பகுதிக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.[3] பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.[4]

போடோலாந்து மக்கள் முன்னணி
BPF
தலைவர்ஹாக்ராம் மோகிலரி
மாநிலங்களவைத் தலைவர்பிஸாவாஜித் டைமரி
தலைமையகம்கோக்ராஜ்கர், அசாம்
கொள்கைமதசார்பின்மை
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி[1]
கூட்டணிவடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(அசாம் சட்டமன்றம்)
12 / 126
தேர்தல் சின்னம்
Nagol
இணையதளம்
www.bpfassam.in
இந்தியா அரசியல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு