போன்ஜர் (மென்பொருள்)

போன்ஜர் என்பது ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வெளியாகி இருக்கும் ஒரு மென்பொருளின் வியாபாரப் பெயராகும். இது முன்னர் ரென்டெஸ்வஸ் என்றழைக்கப்பட்டு வந்தது. அச்சுப்பொறிகளையும், இணைக்கப்பட்டிருக்கும் பிற கணினிகளையும், இணைக்கப்பட்டிருக்கும் ஏனைய பிற உபகரணங்களையும் கண்டறிய போன்ஜர் பயன்படுகிறது.

போன்ஜர்
உருவாக்குனர்ஆப்பிள் இன்க்.
இயக்கு முறைமைமேக் இயங்குத்தளம் X, விண்டோஸ் 32 பிட் மற்றும் 64 பிட், லினக்ஸ், ஐ-போன் இயங்குத்தளம்
மென்பொருள் வகைமைZeroconf
உரிமம்Apple Inc. - Proprietary Freeware; portions under the Apache license
இணையத்தளம்http://developer.apple.com/bonjour

தற்போது 10.4+ பதிப்பில் இருக்கும் போன்ஜர் மென்பொருள், ஆப்பிளின் மேக் இயங்குதளமான X இயக்க அமைப்பில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஐ-டியூன்ஸ் (iTunes) போன்ற ஏனைய பிற மென்பொருள்களிலும் போன்ஜர் கூறுபாடுகள் இணைக்கப்படும்.

ஆப்பிள் நிறுவனத்தின் வரம்புக்குட்பட்ட பயன்பாட்டு உரிம வரையறையின் கீழ் போன்ஜர் வெளியிடப்படுகிறது. மென்பொருள் அபிவிருத்தியாளர்களும், மென்பொருள் நிறுவனங்களும் உரிம ஒப்பந்தத் தேவைக்காக அதை மென்பொருள் தொகுப்பில் சேர்க்க விரும்பிய போதிலும், அது வாடிக்கையாளர்களுக்கான இலவச மென்பொருளாகவே கிடைக்கிறது. இதற்கான மூல நிரல் அப்பாச்சி உரிமத்தின்கீழ் கிடைக்கிறது.

மேலோட்டப்பார்வை

தொகு

போன்ஜர் என்பது குறும்பரப்பு வலையமைப்பில் இருக்கும் சேவைகளையும், உபகரணங்களையும், வலையமைப்புகளையும் கண்டுபிடிப்பதற்கான ஒரு பொதுவான வழிமுறையாகும். அது பெருமளவில் மேக் இயங்குத்தளமான X-ல் பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இதைக்கொண்டு எந்தவொரு உள்ளமைவும் (Configuration) செய்யாமலேயே வலையமைப்பை உருவாக்கி கொள்ளலாம்.

அச்சுப்பொறி மற்றும் கோப்புப் பகிர்வு சேவையகங்களைக் கண்டறிவதற்கும் போன்ஜர் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இது மேக் இயங்குத்தளத்தில் மட்டுமின்றி ஏனைய இயங்குத்தளங்களிலும் பயன்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, அது பகிர்ந்துகொள்ளப்பட்ட இசைத்துணுக்குகளைக் கண்டறிவதற்கு ஐ-டியூன்ஸால் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட நிழற்படங்களைக் கண்டறிவதற்கு ஐ-போட்டோ வசதியினாலும், உள்ளமைப்புப் பதிவுகளைப் பல்வேறு வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஐசேட் (iChat), அடோப் சிஸ்டம்ஸ் கிரியேட்டிவ் சூட் 3 (Adobe Creative Suite 3), புரோட்டியஸ் (Proteus), அடியம் (Adium), ஃபையர் (Fire), பிட்ஜின் (Pidgin), ஸ்கைப் (Skype), வைன் சர்வர் (Vine server) ஆகியவற்றாலும், குறும் வலையமைப்பில் உள்ள பிற பயனர்களைக் கண்டறிவதற்கு ஜிஸ்மோ5 (Gizmo5) என்பதனாலும், மேலும் பல தொழில்நுட்பங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது வலையமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் உபகரணங்களின் உள்ளமைவு பக்கங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

போன்ஜர் ஒற்றைப் பரப்பு களத்தில் (single broadcast domain) மட்டுமே வேலை செய்யும். பொதுவாக, அந்த களம் சிறப்பார்ந்த முறையில் டிஎன்எஸ் (DNS) உள்ளமைவு செய்யப்படாத, சிறிய பகுதியாகவே இருக்கும்.

பயன்பாடுகள் பொதுவாக டிசிபி/ஐபி அழைப்பைப் பயன்படுத்தியே போன்ஜர் சேவைகளைச் செயல்படுத்துகின்றன. மேக் இயங்குத்தளம் X பல்வேறு போன்ஜர் சேவைகளை அளிக்கிறது என்ற போதினும், போன்ஜர் பிற இயங்குத்தளங்களிலும் வேலை செய்யும்.

விண்டோஸிற்கான போன்ஜர் மற்றும் ஜாவா நூலகங்கள் என்றழைக்கப்படும் சேவைகளின் பயனர்-நிறுவும் தொகுதியையும் ஆப்பிள் வழங்குகிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் அமலாக்கம்

தொகு

2010, பிப்ரவரி 24ஆம் தேதி போன்ஜரின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 2000, 2003, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றுடனும் செயல்படக்கூடியது.[1] மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் போன்ஜர் முழுமையாக நிறுவப்பட்டிருந்தால், அது மேக் இயங்குதளம் Xக்கும், விண்டோஸ் இயங்குதளத்திற்கும் இடையில் iChat வசதியை அனுமதிக்கும்.

வழக்கமாக விண்டோஸில் ஏனைய பயன்பாட்டு கோப்புகள் நிறுவப்படும் அதே “Program Files” என்ற கோப்பகத்திலேயே தான் போன்ஜரும் நிறுவப்படும். விண்டோஸில் போன்ஜர் இயக்கப்படும் போது, mDNSResponder.exe என்ற செயலூக்க கோப்பின் மூலமாக தொடங்கப்படும்.

இணையவழி குறுந்தகவல் சேவை (IM) அளிக்கும் பயன்பாடுகளான Pidgin மற்றும் Kopete போன்றவை போன்ஜர் சேவையைப் பயன்படுத்துகின்றன.

2008 செப்டம்பரில், விண்டோஸிற்கான போன்ஜரில் இரண்டு ஊறுபாடுகள் கண்டறியப்பட்டன. அவையாவன: விண்டோஸிற்கான போன்ஜர் மென்பொருளை நிறுவும் போது, சிலவேளைகளில் uninstaller நிறுவப்படாமலேயே இருந்தது; இரண்டாவது, விண்டோஸ் சேவைகள் பட்டியலில் வார்த்தைகள் படிக்க இயலாத நிலையில் உருவாவது. விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் போன்ஜரை நிறுவும் போது, சில ஊறுபாடுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.[1]

பெயர் காரணம்

தொகு

2002ஆம் ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்திய போது, போன்ஜரின் உண்மையான பெயர் "ரென்டெஸ்வாஸ்" ("Rendezvous") என்று இருந்தது. இது மேக் இயங்குத்தளம் X பதிப்பு 10.2-இன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

போன்ஜரின் வியாபார உரிமைக்குறி (trademark) குறித்து தங்கள் நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக TIBCO Software Inc 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிவித்தது.

வர்த்தக அடையாள விதிமுறைக்கு மாறாக நடந்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று டிப்கோ சாஃப்ட்வேர் இன்க் அறிவித்தது.[3] 1994ஆம் ஆண்டு முதல் TIBCO நிறுவனம் சந்தையில் TIBCO Rendezvous என்ற பெயரில் ஒரு தயாரிப்பைக் கொண்டிருந்தது. இதனால் சந்தையில் பெயர் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

2005 ஏப்ரல் 12ஆம் தேதி, ரென்டெஸ்வாஸ் என்ற பெயரை போன்ஜர் என்று மாற்றி இருப்பதாக ஆப்பிள் அறிவித்தது.

மேலும் காண்க

தொகு
  • போன்ஜர் உலாவி – போன்ஜரைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட சேவைகளைப் பார்ப்பதற்கான பயன்பாடு.

பார்வைக் குறிப்புகள்

தொகு
  1. "Bonjour Downloads". Apple Inc. 2010-03-08. Archived from the original on 2010-01-31. பார்க்கப்பட்ட நாள் 2010-03-08.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போன்ஜர்_(மென்பொருள்)&oldid=3872565" இலிருந்து மீள்விக்கப்பட்டது