போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி
போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி (Lucknow–Bhopal Garib Rath Express) என்னும் இந்தத் ரயில் வாராந்திர அதிவிரைவு வண்டியாகச் செயல்பட்டு வருகிறது.[1] இது மத்தியபிரதேசத்தின் தலைநகரமான போபால் சந்திப்பில் இருந்து உத்திரப்பிதேசத்தின் தலைநகரமான இலக்னோ சந்திப்புத் தொடருந்து நிலையம் (LJN) வரை இயங்குகிறது. இந்த ரயில் சேவை 2011-2012ஆம் ஆண்டின் ரயில்வே நிதிநிலையில் அறிவிக்கப்பட்டது.
போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி Lucknow - Bhopal Garib Rath Express | |
---|---|
இலக்னோ தொடருந்து நிலையத்தில் ஏழைகள் ரதம் | |
கண்ணோட்டம் | |
வகை | ஏழைகள் ரதம் விரைவுவண்டி |
நிகழ்வு இயலிடம் | உத்தரப் பிரதேசம் & மத்தியப் பிரதேசம் |
முதல் சேவை | 19 நவம்பர் 2011 |
நடத்துனர்(கள்) | வடகிழக்கு இரயில்வே |
வழி | |
தொடக்கம் | இலக்னோ |
இடைநிறுத்தங்கள் | விதிஷா, பினா சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, கான்பூர் மத்தி |
முடிவு | போபால் சந்திப்பு |
ஓடும் தூரம் | 585 km (364 mi) |
சராசரி பயண நேரம் | 10 மணி 50 நிமிடம் |
சேவைகளின் காலஅளவு | வாரந்திரம் |
தொடருந்தின் இலக்கம் | 12593 / 12594 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | குளிரூட்டப்பட்ட மூன்று அடுக்கு |
இருக்கை வசதி | ஆம் |
படுக்கை வசதி | ஆம் |
உணவு வசதிகள் | தன்னமைவு உணவு வழங்கல் மின்வழி-உணவு வழங்கல் |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | இந்திய ரயில்வே ஏழைகள் ரதம் |
பாதை | அகலப் பாதை |
வேகம் | சராசரியாக 63 km/h (39 mph) நிறுத்தங்களுடன் |
வழி மற்றும் நிறுத்தங்கள்
தொகுஇந்த ரயில் பினா-ஜான்சி வழித்தடத்தில் போபால் மற்றும் இலக்னோ இடையே செல்கிறது. தொடருந்தின் முக்கிய நிறுத்தங்கள்:
- போபால் சந்திப்பு
- விதிஷா
- பினா சந்திப்பு
- ஜான்சி சந்திப்பு
- கான்பூர் மத்திய சந்திப்பு
- இலக்னோ சந்திப்பு
பெட்டிகள்
தொகுஇந்தத் தொடருந்து மொத்தம் பன்னிரண்டு பெட்டிகள் கொண்டதாகும். இதில் பத்து பெட்டிகள் குளிருட்டப்பட்ட மூன்று அடுக்குப் பெட்டிகள், இரண்டு சுமை/மின்னாக்கி பெட்டிகள் உள்ளன.
சராசரி வேகம்
தொகுஇந்த இரயிலின் சராசரி வேகம் 63 கி.மீ/மணி ஆகும். இது ஒரு வாரந்திர ரயில் ஆகும்.
பிற இரயில்கள்
தொகுஇந்த வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்கள் 12183 / 12184 போபாஸ் - லக்னோ பிராத்கட் விரைவுவண்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ Gupta, Divyanshu. "12593/Lucknow Jn - Bhopal Garib Rath Express - Lucknow Junction NER to Bhopal NER/North Eastern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.