விதிஷா நகரம், இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் பேட்வா ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரம் விதிஷா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். மாநிலத் தலைநகரான போபாலிருந்து 54 கி மீ தொலைவில் உள்ளது.

விதிஷா
நகரம்
Mathura
சாம்ராட் அசோகர் தொழில்நுட்ப நிறுவனம், விதிஷா
Vidisha
Vidisha
Vidisha
Vidisha
ஆள்கூறுகள்: 23°32′N 77°49′E / 23.53°N 77.82°E / 23.53; 77.82
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்விதிஷா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி


மக்கள் தொகையியல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விதிஷா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 155,951 ஆகும். அதில் ஆண்கள் 81,488; பெண்கள் 74,463 ஆக உள்ளனர். விதிஷா நகரத்தில் இந்துக்கள் 137,373 (88.09 %); இசுலாமியர்கள் 10,089 (6.47 %); சமனர்கள் 7,376 (4.73 %) மற்றும் பிற மக்கள் 1.,113 (0.72%) ஆக உள்ளனர்.[1]

வரலாற்று இடங்களும், நினைவுச் சின்னங்களும்

தொகு
 
ஹேலியோடோரஸ் தூண்

இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில் இருந்த, இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் என்பவரால், கி மு 113-இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்ட தூண் ஆகும். கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.[2]

வரலாறு

தொகு

கி மு ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சுங்கப் பேரரசு, சாதவாகனப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் காலத்தில் விதிஷா நகரம் பெரும் வணிக மையமாக விளங்கியது. விதிஷா நகரத்திலிருந்து 9 கி மீ தொலைவில் பௌத்த தலமான சாஞ்சி உள்ளது. அசோகர், இளவரசராக இருந்த போது விதிஷா பகுதியின் ஆளுநராக இருந்தவர்.

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

போக்குவரத்து வசதிகள்

தொகு
 
விதிஷா தொடருந்து நிலையம்
 
சித்தேஸ்வரி கோயில், விதிஷா தொடருந்து நிலையப் பகுதி

தில்லிசென்னை, தில்லி – மும்பை இருப்புப் பாதை வழித் தடத்தில் விதிஷா நகரம் அமைந்துள்ளது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Vidisha City Population 2011
  2. Hermann Kulke and Dietmar Rothermund (2004). A History of India. Routledge. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32920-5.
  3. "10 things to know about Noble Prize winner Kailash Satyarthi". Zee News.
  4. Vidhisha Railway Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிஷா&oldid=3437232" இலிருந்து மீள்விக்கப்பட்டது