போயகொண்டா கங்கம்மா
போயகொண்ட கங்கம்மா (Boyakonda Gangamma) என்பது ஆந்திரப் பிரதேசம், மதனப்பள்ளியிலிருந்து 20 கிமீ மற்றும் பெங்களூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள போயகொண்டாவில் உள்ள கங்கம்மா தேவியைக் ( சக்தியின் அவதாரம்) குறிப்பதாகும். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்குனூர் தாலுகாவில், திகுவப்பள்ளி பஞ்சாயத்து, சௌடேபள்ளி மண்டலத்தில் உள்ளது. இங்கு இந்து புனித யாத்திரை மையமும் உள்ளது.
வரலாறு
தொகுநூற்றாண்டுகளுக்கு முன்பு போயர் மற்றும் பால ஏகாரி ஆகிய இன மக்கள் இல்லாக்கு பகுதியைச் சுற்றிய காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்கள், அவர்கள் வெகுண்டெழுந்து நவாப்களின் அடக்குமுறை மற்றும் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்தனர். முஸ்லீம் வீரர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களை விரட்டியடித்தனர். கொல்கொண்டா நவாப் கிளர்ச்சியை நசுக்க கூடுதல் படைகளை அனுப்பி வைத்ததோடு தானும் விரைந்தார்... பழங்குடியினர் முஸ்லீம் இராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியாமல் காட்டுக்குள் ஓடி வந்து குன்றின் அருகே சாஷ்டாங்கமாக வணங்கி அவர்களைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். சக்தி தேவியின் சக்திரூபம் மலையிலிருந்து இறங்கி, பழங்குடியினரைக் கேடயமாக்கி, நவாபின் படையை நசுக்கி படைவீரர்களின் தலையை ஆலமரக்கிளைகளில் கட்டியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். போயர்கள் மற்றும் பாலா ஏகாரி இணைந்து வெற்றி பெற்ற பின்னர், கங்கம்மா கோவிலை கட்டினார்கள், அது அவர்களை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றி, பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்றது. அந்தப் பகுதியில் போயர்களும், பால ஏகாரிகளும் ஆதிக்கம் செலுத்தி அம்மாவாருக்கு சேவை செய்கின்றனர்.
தெய்வீகத் தன்மை
தொகுபக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த அம்மன், இங்குள்ள பழங்கால மக்களான போயர்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, அன்றிலிருந்து அவர்கள் அம்மனுக்கு பக்தியோடு தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.
ஆலயம்
தொகுமலையின் உச்சியில் அமைந்துள்ள பல பழமையான கோவில்களில் கங்கம்மா தேவியின் ஆலயமும் ஒன்று. "பாயீகொண்டா" என உச்சரிக்கப்படும் "பாய்கொண்டா" என்ற வார்த்தைக்கு கிணறு உள்ள மலை என்று பொருள். இந்த கிணற்றின் அருகே தேவி வாசம் செய்வதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த தெய்வம் அனைத்து தீமைகளையும் அழிக்கும் என்று அறியப்படுகிறது, மேலும் அவளை உண்மையாக வணங்குபவர்கள் வெற்றி பெறுவார்கள். இவரது கோவில் வெங்கடேஸ்வரரின் சகோதரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.