போயிட்டு வாங்க சார் (நூல்)
குட்பை, மிஸ்டர். சிப்ஸ், என்பது பள்ளி ஆசிரியரான சிப்பிங்கின் வாழ்க்கையைப் பற்றிய ஆங்கிலப் புதினமாகும். இதை ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஹில்டன் எழுதினார். இது 1934 அக்டோபரில் ஹோட்டர் & ஸ்டோட்டனால் முதலில் வெளியிட்டப்பட்டது. இந்த புதினத்தைத் தழுவி இரண்டு திரைப்படங்களும், இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன .
முதற்பதிப்பின் மேலட்டை | |
நூலாசிரியர் | ஜேம்ஸ் ஹில்டன் |
---|---|
பட வரைஞர் | Ethel "Bip" Pares |
வகை | உளவியல் புதினம் |
வெளியீட்டாளர் | லிட்டில், பிரவுன் அன்டு கம்பெனி (ஐக்கிய அமெரிக்கா) ஹோடர் & ஸ்டோட்டன் (ஐக்கிய இராச்சியம்) |
வெளியிடப்பட்ட நாள் | சூன் 1934 அக்டோபர் 1934 (UK) | (US)
OCLC | 8462789 |
நூலாசிரியர் | ச. மாடசாமி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | புக்ஸ் ஃபார் சில்ரன் |
வெளியிடப்பட்ட நாள் | ஜூன், 2013 |
பக்கங்கள் | 63 |
ISBN | 9382826963, 9789382826965 |
தமிழ் மொழிபெயர்ப்பு
தொகுஇப்பதினம் தமிழில் போயிட்டு வாங்க சார் என்ற பெயரில் ச. மாடசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1]போயிட்டு வாங்க சார் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல, ”குட்பை மிஸ்டர் சிப்ஸ்” வாசித்த அனுபவமே ஆகும் என நூலில் மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நூல் சுருக்கம்
தொகுஇக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர். பெயர் சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். ஓய்வுபெற்ற பின் தனது பணி அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ போயிட்டு வாங்க சார்!...: Good Bye, Mr. Chips, கூகுள் புக்சு