போரேன் கார்பனைல்

போரேன் கார்பனைல் (Borane carbonyl) என்பது H3BCO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்நிறமற்ற வாயுவானது போரேன் மற்றும் கார்பனோராக்சைடு ஆகியவற்றின் கூட்டு விளைபொருளாகும். போரேன்-ஈதர் அணைவுச் சேர்மங்களுடன் கார்பனோராக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்வதால் இச்சேர்மம் உருவாகிறது. கருத்தியல் மற்றும் வழிகாட்டி என்ற நிலையில்தான் இச்சேர்மம் இச்சேர்மம் ஆராயப்பட்டு வருகின்றது[1]. நீரிய காரத்துடன் போரேன் கார்பனைல் வினைபுரிந்து போரான்கார்பனேட்டு, H3BCO22− உருவாகிறது[2]. கட்டமைப்பில் B-C, 1.529, C-O, 1.140; 1.194 Å. என்ற பிணைப்பு இடைவெளிகள் உள்ளன. H-B-H பிணைப்புக் கோணம் 113.7° ஆகும். CO பிணைப்பின் அதிர்வுப்பட்டை 2165 செ.மீ−1, 22 செ.மீ−1 என்று கணக்கிடப்பட்டுள்ளது தனி கார்பனோராக்சைடைக் காட்டிலும் இது அதிகமாகும்[3].

போரேன் கார்பனைல்
பெயர்கள்
வேறு பெயர்கள்
Carbonyltrihydroboron
இனங்காட்டிகள்
13205-44-2
ChemSpider 10225684
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [BH3-]C#[O-]
பண்புகள்
CH3BO
வாய்ப்பாட்டு எடை 41.84 g·mol−1
தோற்றம் colorless gas
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Alberto, R.; Ortner, K.; Wheatley, N.; Schibli, R.; Schubiger, A. P. (2001). "Synthesis and Properties of Boranocarbonate: A Convenient in Situ CO Source for the Aqueous Preparation of [99mTc(OH2)3(CO)3]+". J. Am. Chem. Soc. 123: 3135–3136. doi:10.1021/ja003932b. 
  3. Jacobsen, H.; Berke, H.; Doering, S.; Kehr, G.; Erker, G.; Froehlich, R.; Meyer, O. (1999). "Lewis Acid Properties of Tris(pentafluorophenyl)borane. Structure and Bonding in L-B(C6F5)3 Complexes". Organometallics 18: 1724–1735. doi:10.1021/OM981033E. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரேன்_கார்பனைல்&oldid=3027152" இலிருந்து மீள்விக்கப்பட்டது