போர்க்குற்ற நாள் (தமிழீழம்)

இலங்கைத் தமிழகத்திற்கு எதிராக நடைபெற்ற போரின் கடைசி நாள்.

போர்க்குற்ற நாள் (மே 18) என்பது 2009 ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் இலங்கைத் தமிழினத்திற்கு எதிராக நடைபெற்ற போரின் கடைசி நாள் ஆகும். இப்போரில் இலங்கை அரசு அனைத்துலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டு உள்ளிட்ட பல கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தியது. 40,000க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்து போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை வலியுறுத்தும் விதத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் மே 18 போர்க்குற்ற நாளாக, இன அழிப்பிற்கெதிரான நாளாக, கரி நாளாக அடையாளப்படுத்தப்படுகின்றது.