போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017

போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017 (2017 Portugal wildfires) என்ற நிகழ்வு 2017 சூன் 17-18 இரவு நடு போர்ச்சுக்கல்லில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகும். இவ்விபத்தில் குறைந்தது 62 பேர் இறந்து, 62 பேர் காயம் அடைந்தனர்.[1][2] பெடரோகோ கிராண்டேவில் பெரும் எண்ணிக்கையிலான இறப்புக்கள் நிகழ்ந்தன, காட்டுவழியே சாலையில் மகிழுந்துகளில் சென்றவர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர். போர்த்துகீசிய அதிகாரிகளும் 1,700 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடினர்; ஜூன் 18 முதல் மூன்று நாட்களைத் தேசிய துக்கநாட்களாக பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அறிவித்தார்.

போர்ச்சுக்கல் காட்டுத்தீ 2017
சூன் 18 அன்று போர்த்துக்கல் காட்டுத்தீ மற்றும் தொடர்புடைய புகைப்பகுதிகளை காட்டும் நாசாவின் செயற்கைக்கோள் படம்.
அமைவிடம்போர்த்துகல், லிரியா மாவட்டம், பெட்ரோகா கிராண்டே
Coordinates39°57′N 8°14′W / 39.950°N 8.233°W / 39.950; -8.233
புள்ளிவிவரங்கள்
மொத்தத் தீமொத்தம் 156 total, 11 நிகழ்நிலை
நாள்(கள்)17 சூன் 2017 – தொடர்வு
காரணம்உலர் இடியுடன் கூடிய மழை
காயங்கள்135 (உறுதியாக) (7 ஆபத்தான நிலை)[1]
உயிரிழப்புகள்62 (உறுதியாக)

பின்னணி தொகு

காட்டுத்தீ உருவாகும் முன்பு, போர்ச்சுக்கலின் பல பகுதிகளில் கடும் வெப்பஅலை வீசய காரணத்தால் மிகுதியான வெப்ப நிலை நிலவியது (40 °C (104 °F)).[3] ஜூன் 17-18 இரவின் போது, லிஸ்பனின் வட-வடகிழக்கில் 200 கிலோமீட்டர் (120 மைல்) மலைப்பகுதியின் பல இடங்களில் 156 தீ விபத்துகள் ஏற்பட்டன.[4] மிகவும் அதிகமாகப் பரவுவதற்கு முன்னர் தீயானது தீபகாரோ கிராண்டி நகராட்சி பகுதியில் தோன்றியது.[5] இந்நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட உலர் இடி நிகழ்வினால் தீப்பிடித்திருக்கலாம்:[6] காவல் துறை தேசிய ஆணையர் அல்மேடா ரோட்ரிக்ஸ் தலைமையிலான காவல்துறையினரும், தேசிய குடியரசுக் காவலரும் சேர்ந்து, மின்னல் தாக்கித் தீ தொடங்கிய மரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.[7]

நிகழ்வுகள் தொகு

தீவிபத்தில் நாடு முழுவதும் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்தனர் [8][3] - போர்ச்சுகலின் வரலாற்றில் காட்டுத்தீயின் காரணமாக மிகுதியானவர்கள் இறந்த நிகழ்வு இதுவேயாகும். [9][10] எட்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 54 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்; [11] நான்கு தீயணைப்பு வீரர்களும், ஒரு குழந்தையும்-மோசமான நிலையில் உள்ளனர். [5] இரண்டு தீயணைப்பு வீரர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. [3] பெடரோகோ கிராண்டே கிராமப்புற சாலையில் வாகனங்களுக்குள் அல்லது வாகனங்களுக்கருகிலுமாக, 47 பேர் இத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களுள் 30 பேர் தங்கள் வாகனங்களுக்குள் சிக்கியும், மீதம் 17 பேர் தப்பித்து ஓடும்போதும் தீயில் சிக்கி மாண்டனர். மற்றோரு நிகழ்வாக ஐசி 8 நெடுஞ்சாலைக்கு அருகே நோடிரினோஹோவில் 11 பேர் இறந்தனர். [3] நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு பெரிய நீர் தொட்டியில் இறங்கியதால் மோவோ கிராண்டிற்கு அருகில் பன்னிரண்டு பேர் தப்பிப்ன்பிழைத்தனர். [12] டசன் கணக்கான சிறு சமூகங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். [13][14][15]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Público (19 June 2017). "Ao minuto: Situação em Pedrógão ainda é "preocupante", diz Protecção Civil. Número de mortos mantém-se em 62" (in Portuguese). Público. https://www.publico.pt/sociedade/noticia/ao-minuto-o-que-se-passou-para-morrerem-19-pessoas-num-incendio-1776047. பார்த்த நாள்: 19 June 2017. 
  2. BBC News (19 June 2017). "Portugal forest fires kill 62 near Coimbra". BBC News. http://www.bbc.com/news/world-europe-40316934. பார்த்த நாள்: 19 June 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Portugal forest fires kill 61 near Coimbra". BBC. 18 June 2017. http://www.bbc.com/news/world-europe-40316934. பார்த்த நாள்: 18 June 2017. 
  4. "Portugal forest fires: three days of mourning for 61 victims". BBC. 18 June 2017. http://www.bbc.com/news/world-europe-40320411. பார்த்த நாள்: 18 June 2017. 
  5. 5.0 5.1 Jones, Sam (18 June 2017). "Huge forest fires in Portugal kill more than 60 people". The Guardian. https://www.theguardian.com/world/2017/jun/18/portugal-more-than-20-people-killed-in-forest-fires. பார்த்த நாள்: 18 June 2017. 
  6. "Portugal: Staatstrauer wegen verheerenden Waldbrands [Portugal: state-run because of devastating forest fires]" (in de-DE). Die Zeit. 2017-06-18. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2070. http://www.zeit.de/gesellschaft/zeitgeschehen/2017-06/portugal-waldbrand-opfer-blitzschlag-feuer. பார்த்த நாள்: 2017-06-18. 
  7. "Polícia Judiciária afasta origem criminosa de incêndio. Um raio atingiu uma árvore" (in pt). Visão (Sapo). 18 June 2017. http://visao.sapo.pt/actualidade/portugal/2017-06-18-Policia-Judiciaria-afasta-origem-criminosa-de-incendio.-Um-raio-atingiu-uma-arvore. பார்த்த நாள்: 18 June 2017. 
  8. "The Latest: Portugal raises death toll back to 62". The Miami Herald. The Associated Press. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  9. Phippen, Weston. "A Deadly Forest Fire in Portugal". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
  10. "Portugal forest fires kill 57 near Coimbra". BBC. 18 June 2017. http://www.bbc.co.uk/news/world-europe-40316934. 
  11. Jones, Julia; Chavez, Nicole; Narayan, Chandrika (18 June 2017). "Portugal fire victims burned in cars as they fled; 61 killed". CNN. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
  12. "Portugal forest fire: 12 survive by hiding in a water tank". BBC. 19 June 2017. http://www.bbc.com/news/world-europe-40324006. பார்த்த நாள்: 19 June 2017. 
  13. "Incêndio em Pedrógão ao minuto: Número de mortos aumenta para 57. Trovoadas secas na origem do fogo" [Fire at Pedrogão grande by the minute: number of deaths rises to 57. Dry lightning at the fire origin]. Público (in போர்ச்சுகீஸ்). 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
  14. "Pelo menos 57 pessoas morrem no incêndio em Pedrógão Grande" [Até least 57 deaths at the fire in Pedrógão grande]. Observador (in போர்ச்சுகீஸ்). 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
  15. "57 mortos no incêndio em Pedrógão Grande" [57 dead in the Pedrógão Grande fire]. Diário de Notícias (in போர்ச்சுகீஸ்). 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.