போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா
போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் போர்த்துக்கீசிய மொழி பதிப்பு ஆகும். 2001 சூன் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பத்தாவது[2] இடத்தில் இருக்கும் போர்த்துக்கீசிய விக்கியில் இன்று வரை மொத்தம் 683,010 கட்டுரைகள் உள்ளன. இந்த மொழியின் ஐரோப்பிய மற்றும் பிரேசிலிய வழக்கில் உள்ள சில சொல்லகராதி வேருபாட்டு பிழைகளை காரணம் காட்டி, பிரேசிலிய வழக்கில் புதிய தனித்த விக்கிப்பீடியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2005 ல் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | போர்த்துக்கீசிய மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.pt.wikipedia.org/ |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் போர்த்துக்கீசிய விக்கிப்பீடியாப் பதிப்பு