போர்வஞ்சி
போர்வஞ்சி என்பது திருவரன்குளம் உடையான் என்னும் புலவரால் இயற்றப்பட்ட ஒரு நூல். இது ஆவணங்களில் காணப்படும் நூல். பெருவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த்து. திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சையையும், உறந்தையையும் வென்று தீயிட்டுக் கொளுத்தினான் என்று கூறும் புதுக்கோட்டை, திருவரன்குளம், திருமால் கோயில் கல்வெட்டு இந்த நூலைக் குறிப்பிடுகிறது. இந்த நூலைப் பாடியதற்காக இவருக்குத் தூத்துக்குடி இக்காலத்தில் நன்னிலம் என்னும் பகுதியாக விளங்கும் ஊரின் பாதி நிலம் இறையிலியாக வழங்கப்பட்டது. [1]
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13-ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் 11-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1227) புதுக்கோட்டை மாவட்டம் திருவரன்குளம் திருமால் கோயில் கல்வெட்டு