போலி அஞ்சல் தலை
(போலி அஞ்சல்தலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போலி அஞ்சல்தலை (dummy stamp) என்பது அஞ்சல்தலையைப் போன்ற ஒரு சிட்டை ஆகும். இது சின்டரெல்லா அஞ்சல்தலையின் ஒரு வடிவம் ஆகும். போலி அஞ்சல்தலை இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று சோதனைக்கும் பயிற்சிக்குமான அஞ்சல்தலை. இது, அஞ்சல் கருவிகளைச் சோதித்துப் பார்ப்பதற்கும்,[1] அஞ்சல் அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் பயன்படுகிறது. மற்றது, அச்சகத்தை விளம்பரப்படுத்துவதற்கோ அதன் திறனை விளக்குவதற்கோ பயன்படும் அச்சக மாதிரி அஞ்சல்தலை.
ஐக்கிய அமெரிக்காவில் இச்சொல் பெரும்பாலும் சோதனைக்கும் பயிற்சிக்குமான அஞ்சல்தலையையே குறிக்கும்.[2] ஐக்கிய இராச்சியத்தில் இது ஊக்குவிப்பதற்கும், மாதிரிக்குமான அஞ்சல்தலைகளையும் உள்ளடக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sutton, R.J. & K.W. Anthony. The Stamp Collector's Encyclopaedia. 6th edition. London: Stanley Paul, 1966, p. 236.
- ↑ Glossary of Terms for the Collector of United States Stamps. பரணிடப்பட்டது 2013-10-05 at the வந்தவழி இயந்திரம்United States Stamp Society, 2012. Retrieved 5 July 2013..