போலி எழுத்து
போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை எழுத்துப் போலி எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் இந்தப் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.
எழுதும்போது தோன்றும் போலி
தொகு- ஐவனம் [1] என்பதை அஇவனம் என்றும், அய்வனம் என்றும் எழுதுவது.
- ஔவை என்பதை அஉவை என்றும், அவ்வை என்றும் எழுதுவது.[2][3]
இந்த முறைமையை வடநூலார் சந்தியக்கரம் என்பர்.
மொழியில் தோன்றும் போலி
தொகுசொல்லில் ஒரு எழுத்து இருக்குமிடத்தில் மற்றொரு எழுத்து மயங்குகிறது. இதனைப் போலி என்கிறோம்
[ம்] > [ன்] மயக்கம்
தொகுமொழியின் இறுதியில் வரும் இந்த எழுத்துக்கள் மயங்கும். [4] நன்னூல் இதனைப் பொதுப்படக் கூறினாலும் வருமொழி உயிர்முதல் ஆயின் மயங்கும் என இலக்கிய ஆட்சிகளால் அறியலாம்.
[ம்] > [ன்] மயங்காதவை
தொகு'ன்' எழுத்தில் முடியும் ஒன்பது சொற்கள் 'ம்' என மயங்குவது இல்லை என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அந்த 9 சொற்கள் இவை என இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.[12]
- இச் சொற்களின் பொருளைச் சான்றுகளுடன் அடிக்குறிப்பில் காணலாம்.
[அ] > [ஐ] மயக்கம்
தொகுஇந்த எழுத்துக்கள் மொழிமுதல் எழுத்தாகவும், மொழியிடை எழுத்தாகவும் வரும்போது மயங்கும்.[23]
- பசல் - பைசல், மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல்
- அரசு - அரைசு, முரஞ்சு - முரைஞ்சு, அரயர் - அரைசர்
[ந] - [ஞ] மயக்கம்
தொகுஐகாரத்தை முதலெழுத்தாக உடைய நகரமும், யகர ஒற்றை அடுத்து வரும் நகரமும் ஞகரமாக மயங்கும்.[24]
- ஐந்நூறு - ஐஞ்ஞூறு, பைந்நிலம் - பைஞ்ஞிலம்
- பொய்ந்நான்றது - பொய்ஞ்ஞான்றது [25]
வழக்கில் காணப்படும் போலி எழுத்துக்கள்
தொகு- பசலை - பயலை - பைதல்
- மாதம் - மாசம்
- பந்தல் - பந்தர்
- சேரல் - சேரன்
அடிக்குறிப்பு
தொகு- ↑ மலைப்பகுதியில் புன்செய்ப் பயிராக விளையும் நெல்
- ↑
அகர இகரம் ஐகாரம் ஆகும். - தொல்காப்பியம் நூன்மரபு 21
அகர உகரம் ஔகாரம் ஆகும். - தொல்காப்பியம் நூன்மரபு 22
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். - தொல்காப்பியம் நூன்மரபு 23 - ↑
அம்மு னிகரம் யகர மென்றிவை
யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன. நன்னூல் 125 - ↑
- மகர விறுதி அஃறிணைப் பெயரின்
- னகரமோ டுறழா நடப்பன வுளவே. - நன்னூல் 122
- ↑ அறம் கூறான் - திருக்குறள் - 181
- ↑ அறன் அறிந்து - திருக்குறள் 141
- ↑ அறன் வலியுறுத்தல் - திருக்குறள் அதிகாரம் 4 (இதில் வ எழுத்து 'அரையுயிர்')
- ↑ நிலம் போல - திருக்குறள் 151
- ↑ நிலன் நோக்கும் - திருக்குறள் 1094
- ↑ குலம் பற்றி - திருக்குறள் 956
- ↑ குலன் உடையான் - திருக்குறள் 223
- ↑
- மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
- னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
- புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. - தொல்காப்பியம் மொழிமரபு 49 இளம்பூரணர் எடுத்துக்காட்டு
- ↑ எகின் என்பது புளிய மரத்தையும் (தொல்காப்பியம் மெய்யீற்றுப் பணரியல் 41)
- ↑ கரடியையும் (தொல்காப்பியம் மெய்யீற்றுப் பணரியல் 42) குறிக்கும்
- ↑ செகின் என்பது செவ்வானம், மனிதனின் தோள்பட்டை, செந்நிறக் காளை ஆகிய பொருள்களை உணர்த்தும் இந்தச் தொல் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர் 'செகில்' என்று வழங்கலாயிற்று.
- ↑ விழன் இக்காலத்தில் விழல் என வழங்கப்படுகிறது. இது வேழ்ம் என்னும் நாணல்தட்டையைக் குறிக்கும். (வேழப்பத்து - ஐங்குறுநூறு மருதம் இரண்டாம் பத்து)
- ↑ பயின் என்பது அரக்கு (அகநானூறு 1)
- ↑ அழன் என்பது அழல். குறிப்பாகப் பிணம் எரியும் தீ
- ↑ புழன் என்பது புழல் என வழங்கப்படும் அடுப்பு ஊதும் ஊதுகுழல்
- ↑ குயின் என்பது துளையிட்ட மணியைக் குறிக்கும். (திருமணி குயினர் - மதுரைக்காஞ்சி 511)
- ↑ கடான் என்பதை இக்காலத்தில் கடா என வழங்குகிறோம். கடான் என்பது ஆண் எருமை.
- ↑ வயான் என்பதை இலக்கியங்கள் வயா என வழங்குகின்றன. பிள்ளைத் தாய்ச்சிகள் மண்ணை உண்ணும் வேடுகையை இது குறிக்கும். வயா என்பது வயவு எனவும் கழங்கப்படும். நிலா என்பது நிலவு என வழங்கப்படுவது போன்றது இது.
- ↑
- அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். - நன்னூல் 123
- ↑
- ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
- ஞஃகா னுறழு மென்மரு முளரே. - நன்னூல் 124
- ↑ பொய் நீண்டுகொண்டே போயிற்று