போல்டன் அங்காடி

போல்டன் அங்காடி (Bolton Market) என்பது பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையாகும். சதார் பகுதியின் சின்னா சாலையில் இது அமைந்துள்ளது. அங்காடியின் பெயர் பௌல்டன் அங்காடி என்றும் உச்சரிக்கப்படுகிறது.

போல்டன் அங்காடி
Bolton Market
بولٹن مارکیٹ
நாடுபாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
நகரம்கராச்சி
நிறுவப்பட்டது1883
பெயர்ச்சூட்டுசி.எப். போல்டன்

கராச்சியில் உள்ள பழமையான அங்காடிகளில் இதுவும் ஒன்றாகும். சில்லறை விற்பனையாளர்களுக்கு - முக்கியமாக சிறு வணிகர்கள் - மற்றும் பொது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் ஒரு மையமாக அங்காடி செயல்படுகிறது. இங்கு வழங்கப்படும் குறைப்பு விலையில் பொருட்களை வாங்குவதற்கு அதிக எண்ணிக்கையில் அவர்கள் வருகிறார்கள். மிகக் குறைந்த விலையில் மொத்தமாக கிடைக்கும் பல்வேறு வகையான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.[1][2]

வரலாறு தொகு

போல்டன் அங்காடி 1883 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் ஒரு பழம் மற்றும் காய்கறி அங்காடியாக கட்டப்பட்டது. சி.எஃப். போல்டன் அப்போது கராச்சியின் நகராட்சி ஆணையராக இருந்தார்.[3][4] 1886 ஆம் ஆண்டில், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு இடமளிக்கும் வகையில் சந்தையின் அளவு விரிவாக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Hasan, Shazia (January 29, 2017). "What a spectacle!". DAWN.COM.
  2. "Boulton Market, Karachi".
  3. 3.0 3.1 Adil, Mamun M. (January 10, 2015). "Revisiting Kurachee..." DAWN.COM.
  4. "Boulton Market: a scarred vestige from a bygone era". The Express Tribune. July 9, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்டன்_அங்காடி&oldid=3751458" இலிருந்து மீள்விக்கப்பட்டது