போளூர் வரதன்
போளூர் எம் வரதன் (Polur M. Varadhan) ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
போளூர் ம. வரதன் | |
---|---|
பிறப்பு | 25 பிப்ரவரி 1952 கீழ்கரிக்கத்தூர், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | சனவரி 27, 2011 சென்னை, தமிழ்நாடு | (அகவை 58)
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | பிரேமா |
பிள்ளைகள் | இராசீவ் |
வரதன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா கீழ்கரிக்கத்தூர் கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் பிறந்தார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் உயிர் நீத்தார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் காலமானார்". Dina Mani. 27 January 2011 இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110814174517/http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=367648&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=. பார்த்த நாள்: 27 January 2011.
- ↑ "Congress MLA Varadhan dead". The Hindu. 28 January 2011 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023040402/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1131196.ece. பார்த்த நாள்: 28 January 2011.