போவியம்
போவியம் (Fauvism) இது பிரெஞ்சு மொழியில் காட்டு விலங்குகள் என்னும் பொருள்படும் லெ ஃபோவே (Les Fauves) என்னும் பெயருடைய நவீன ஓவியர்களைக் கொண்ட குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த இவ்வோவியர்களுடைய படைப்புக்கள் மிகைப்படுத்திய பூச்சுத்தன்மை கொண்டவையாகவும், கடும் நிறங்களோடு கூடியவையாகவும் இருந்தன. போவியம் ஒரு பாணியாக 1900 ஆவது ஆண்டளவில் தொடங்கி 1910 ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்தது எனினும், இந்த இயக்கம் 1904 முதல் 1908 வரை மிகவும் குறைந்த காலமே இருந்தது.[1][2] இக்காலப் பகுதியில் இவ்வியக்கத்தினரின் மூன்று கண்காட்சிகள் இடம் பெற்றன. என்றி மட்டிசு (Henri Matisse), ஆன்ட்ரே டெரெயின் (André Derain) ஆகியோர் இவ்வியக்கத்தின் முன்னணி ஓவியர்களாவர்.[1]
குறிப்புக்கள்
தொகு- ↑ 1.0 1.1 John Elderfield, The "Wild Beasts" Fauvism and Its Affinities, 1976, Museum of Modern Art, p.13, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87070-638-1
- ↑ Freeman, Judi, et al., The Fauve Landscape, 1990, Abbeville Press, p. 13, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55859-025-0.