பௌச பூர்ணிமா
புஸ்புனி என்றும் அழைக்கப்படும் பௌச பூர்ணிமா, இந்தியாவின் ஒடிசாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். [1] இது புஸ் மாதத்தின் (சமஸ்கிருத பௌச ) புனி (பௌர்ணமி ) நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த முழுநிலவு தினம் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இந்திய நிலத்தின் பழமையான விவசாய கலாச்சாரத்திலிருந்து இவ்விழாவின் நோக்கத்தைப் பெற்றுள்ளது.. அடிப்படையில், இது ஒடிய விவசாயி குடும்பங்கள் தங்கள் வருடாந்திர நெல் அறுவடையை கொண்டாடும் ஆண்டு விழாவாகும். தற்போது மற்ற சமூகத்தினரும் கொண்டாடும் ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. மேற்கு ஒடிசா மக்கள், அவர்களின் பொருளாதாரத் தொழிலைப் பொருட்படுத்தாமல் அன்றைய தினம் விருந்து, பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கடைபிடித்தல்
தொகுபுஸ்புனியின் ஆண்டு வாரியான தேதி மற்றும் நாள்
தொகு- 2018 - 02 ஜனவரி 2018, செவ்வாய்
- 2019 - 21 ஜனவரி 2019, செவ்வாய்
- 2020 - 10 ஜனவரி 2020, வெள்ளி
- 2021 - 28 ஜனவரி 2021, வியாழன்
- 2022 - 17 ஜனவரி 2021, திங்கள்
- 2021 - 06 ஜனவரி 2022, வெள்ளி
விதிவிலக்கு
தொகுஇந்திய சந்திர நாட்காட்டியின்படி அதே நாளில் தனுயாத்ராவின் புராண மன்னனான, கன்சா மிகப்பெரிய திறந்தவெளி அரங்கில் இருக்கும்போது மரணித்த காரணத்தால், மேற்கு ஒடிசாவில் உள்ள பர்கர் நகரத்தில் மட்டும் இவ்விழா ஒரு நாள் தாமதத்துடன் கொண்டாடப்படுகிறது. பிற ஒடிய நகரங்களில் இருந்து இந்நகரம் மட்டும் விதிவிலக்காக கொண்டாடி வருகிறது.
விருந்து மற்றும் மகிழ்ச்சி
தொகுமேற்கு ஒடிசாவின் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் பருவமழை காலத்தில் விதைத்து இலையுதிர் காலத்தில் அறுவடை செய்கிறார்கள். அனைத்து விளைச்சலையும் வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, சில நாட்கள் அனைத்துவித உழைப்பிலிருந்தும் விடுபட்டு ஓய்வில் இருப்பார்கள் அத்தோடு விளைச்சல் நன்றாக இருப்பதால் மிகுந்த திருப்தியை அனுபவிக்கிறார்கள். அதன்பொருட்டு தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இவ்விழா அவர்களை ஊக்குவிக்கிறது. பௌஷா மாதத்தின் பௌர்ணமி நாளில் அவர்கள் அரிசி, சுவையான உணவுகள் ( சா' துன் நா' பஜா ), குறிப்பாக ஆட்டு இறைச்சி, அரிசி புட்டு மற்றும் இனிப்பு அப்பங்களை சமைக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் விவசாய குடும்பத்தினர் ஒன்றாகச் சாப்பிட்டு கொண்டாடுவதோடு பலர் தங்கள் திருமணத்தையும் இந்நாளில் செய்கின்றனர். அவர்கள் தங்கள் உணவுகள் மற்றும் அப்பங்களை அண்டை வீட்டார் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சில சமூகங்கள் குஸ்னா (அரிசி-மதுபானம்) மற்றும் மஹுலியுடன் கொண்டாடுகின்றனர் இந்த விருந்து சமூகமாக விளையாடுதல், பாடுதல் மற்றும் நடனமாடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கடந்த காலத்தில், ஆண் இளைஞர்கள் சூர், குடு, மற்றும் கூர்பாடி விளையாடினர். சிலர் குக்ரமார் (சேவல் சண்டை), கர்ராமர் (ஆட்டுச் சண்டை) போன்ற பொழுதுபோக்குகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதேபோல், பெண்கள் சாத்காதி அல்லது கன்சாடி என்ற விளையாட்டுக்களை வீட்டிற்குள்ளும், ஹூமோ-பௌலி போன்ற விளையாட்டுகளை வெளிப்புறத்திலும் விளையாடினர்.
சேர்-செரா
தொகுபெரிய விருந்து மற்றும் மகிழ்ச்சியைத் தவிர, இந்த புஸ்புனியில் இன்னும் ஒரு பெரிய நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இது செர்-சேரா என்று அழைக்கப்படுகிறது. [2] இந்த வார்த்தை இரண்டு சம்பல்புரி வார்த்தைகளான சேரே மற்றும் சாராவிலிருந்து பெறப்பட்டது. சேரே -சாரே என்றால் "பறவைகளுக்கான தானியங்கள்" - இந்த பூமியில் கவனிக்கப்படாத உயிர்களுக்கும் தங்கள் விளைபொருளின் ஒரு சிறிய பகுதியை பகிர்ந்தளித்தல் என்ற கருத்தில் இந்த நாளில் சிறுவர்களும் சிறுமிகளும் கிராமம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சேர்-சேரா, ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தானியங்களை சேகரிக்கின்றனர். இதை மொத்தமாக சேகரித்து வைத்து விவசாய நிலம் இல்லாத ஆனால் விவசாயிகளை நம்பியிருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களது வீட்டில் இருந்து உணவு மற்றும் விருந்து தயாரிக்கின்றனர். நடனமும் இசையும் குழந்தைகளின் செர்-சேராவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதன் மூலம், சமூகத்தில் கவனிக்கப்படாத உறுப்பினர்களுக்கான அக்கறையை செர் செரா குறிக்கிறது.
பூதி மற்றும் நிஸ்தார்
தொகுஇந்த புஸ்புனி நாளில், அனைத்து விவசாய வேலைகளிலும் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் விவசாய நிலம் வைத்திருப்போர், அவர்களின் கூலிக்கு மேலாக சிறிது பணத்தை அதிகமாக வழங்குகிறார்கள். இந்த அதிகப்படியான ஊதியம் பூதி என்று அழைக்கப்படுகிறது. மேலும், விவசாயி அவர்களுக்கு ஆண்டு வெகுமதியையும் கொடுக்கிறார். இந்த வெகுமதி நிஸ்தார் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிஸ்டாருடன் முந்தைய விவசாய ஆண்டுக்கான முதலாளி தொழிலாளர் இடையிலான ஒப்பந்தம் முடிவடைகிறது. நிஸ்தார் என்ற வார்த்தையின் சொல்லகராதி பொருள் "சுதந்திரம்" என்பதாகும், ஒரு விவசாயத் தொழிலாளிக்கு, புஸ்புனி என்பது சுதந்திரத்தைக் குறிக்கிறது, அதனால் இந்நாளில், கொண்டாடி மகிழ்கின்றனர். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pousa Purnima" (PDF). gopabandhuacademy.gov.in. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
- ↑ "Chher Chhera : The Agricultural Festival of Western Odisha". http://odisha.gov.in/e-magazine/Orissareview/2014/Dec/engpdf/83.pdf.
- ↑ "Farmers Resent as Paddy Procurement Slows Down" இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005132155/http://www.newindianexpress.com/states/odisha/2014/jan/18/Farmers-Resent-as-Paddy-Procurement-Slows-Down-565415.html.
வெளி இணைப்புகள்
தொகு- https://nawrangpur.blogspot.in/2017/01/chher-chhera-in-puspuni-at-nabarangpur.html
- http://www.bhubaneswarbuzz.com/updates/festivals/chher-chhera-puspuni-agricultural-festival-western-odisha
- http://jaikosal.blogspot.in/2011/01/puspuni-important-agricultural-festival.html
- http://eodishasamachar.com/en/western-odisha-community-of-uae-celebrates-puspuni-2017-invites-lokakabipadmashreehaladhar-nag-to-join-the-celebrations/ பரணிடப்பட்டது 2018-07-11 at the வந்தவழி இயந்திரம்
- https://odishalive.tv/news/puspuni-celebrations-organized-at-dubai/ பரணிடப்பட்டது 2018-01-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/uae-w-odisha-community-to-organise-puspani.html