ப. அனுராதா காமன்வெல்த் பளுதூக்குதல் (Commonwealth Weightlifting Championship) போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து பங்கேற்று, தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் படைத்தவர்.[1]

ப. அனுராதா
தனிநபர் தகவல்
சுட்டுப் பெயர்(கள்)அனுராதா உத்தமுண்டார்
தேசியம்இந்தியன்
விளையாட்டு
விளையாட்டுபளுதூக்குதல்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமத்தில், பவுன்ராஜ் உத்தமுண்டார், ராணி தம்பதியரின் மகள் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.[2] இளம்வயதில் தந்தை பவுன்ராஜ் உத்தமுண்டார் இறந்ததால், வறுமையிலும் அண்ணன் மாரிமுத்து உத்தமுண்டார் ஆதரவினால் பல சிரமங்களை தாண்டி பட்ட மேற்படிப்பை முடித்தார். பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான மையத்தில் பளுதூக்கும் போட்டிக்கான பயிற்றுநர் பாடதிட்டத்தை முடித்த பின்பு தனது கடின முயற்சியால் இந்த வெற்றியை அடைந்தார்.[3][4]

போட்டிகள் தொகு

2009ல் இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 35 கிலோ பிரிவில் முதல் இடத்தை பெற்றர். 2019 ல் சமோவ் தீவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "தங்க மங்கை அனுராதா". oneindia.
  2. "Tamil Nadu village girl makes India proud". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
  3. "தடைகளை தாண்டி தங்கம்". பிபிசி.
  4. "தங்கம் வென்ற அனுராதா". இந்து தமிழ் (நாளிதழ்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அனுராதா&oldid=3060451" இலிருந்து மீள்விக்கப்பட்டது