பொதுநலவாயம்

podunalawaya amaippu sabai

காமன்வெல்த் (Commonwealth) ஓர் பொதுவான நல்நோக்கம் கொண்டு நிறுவப்படும் அரசியல் சமூகத்திற்கான வழமையான ஆங்கிலச் சொல்லாகும். இதனை பொதுநலவாயம் எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பல்லாண்டுகளாக இது குடியரசியலுக்கு இணையாக எடுத்தாளப்படுகின்றது.

ஆங்கிலேய பெயர்ச்சொல்லான "காமன்வெல்த்" 15ஆம் நூற்றாண்டிலிருந்தே "பொதுநலம்; பொது நன்மை அல்லது பொது ஆகுபயன்" என்ற பொருளிலே விளங்கி வந்துள்ளது. [1] இது இலத்தீனச் சொல்லான ரெஸ் பப்ளிகா என்பதன் மொழிபெயர்ப்பாக வந்துள்ளது. 17ஆவது நூற்றாண்டில் "காமன்வெல்த்" துவக்கத்திலிருந்த "பொதுநலம்" அல்லது "பொதுச் செல்வம்" என்ற பொருளிலிருந்து "பொது மக்களிடம் அரசாண்மை வழங்கப்பட்ட நாடு; குடியரசு அல்லது மக்களாட்சி நாடு" என்பதைக் குறிக்குமாறு விரிவானது.[2]

ஆத்திரேலியா, பகாமாசு, டொமினிக்கா ஆகிய மூன்று நாடுகளும் நான்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இரண்டு ஐ.அ. ஆட்புலங்களும் தங்களின் அலுவல்முறைப் பெயரில் பொதுநலவாயம் என்பதை இணைத்துக்கொண்டுள்ளன. அண்மையில், சில இறையாண்மை நாடுகளின் பாசமான இணைவுகளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது; குறிப்பிடத்தக்கதாக நாடுகளின் பொதுநலவாயம், பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த முந்தைய நாடுகளின் கூட்டைக் கூறலாம். பல நேரங்களில் இந்தக் கூட்டே சுருக்கமாக "தி காமன்வெல்த்" என ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Commonwealth", Oxford English Dictionary (2nd ed.), dictionary.oed.com, 1989, பார்க்கப்பட்ட நாள் 13 March 2010
  2. "Better things were done, and better managed ... under a Commonwealth than under a King." Pepys, Diary" (1667) "Commonwealth", Oxford English Dictionary (2nd ed.), dictionary.oed.com, 1989, பார்க்கப்பட்ட நாள் 13 March 2010

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுநலவாயம்&oldid=3691498" இலிருந்து மீள்விக்கப்பட்டது