மகரம் மயங்கா னகரத் தொடர்மொழி

மகரம் என்னும் சொல் 'ம்' என்னும் மெய்யழுத்தைக் குறிக்கும். மொழியின் [1] இறுதியில் வரும் மகரம் னகர எழுத்தாக மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு - அறம் செய்யான் அறன் அழீஇ, அறன் வலியுறுத்தல், புறனடை - என்பன மயங்கி வந்தன.
இப்படி மயங்காமல் வரும் னகரத் தொடர்மொழிகள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [2]
இவற்றிற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் தரும் சொற்கள் இவை.

அழன் [3], எகின் [4] [5], குயின் [6], செகின் [7] பயின் [8], புழன் [9], விழன் [10], கடான் [11] [12], வயான் [13] - இவை இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள்.

அடிக்குறிப்பு தொகு

  1. சொல்லின்
  2. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
    னகரத்தொடர்மொழி ஒன்பஃது என்ப
    புகர் அறக் கிளந்த அஃறிணை மேன (தொல்காப்பியம் 82)
  3. ஈமத் தீ
  4. அன்னம் என்னும் பறவை
  5. புளியமரம்
  6. மழைமேகம்
  7. செகில் எனக் எனக் கூறப்படும் திமில், காளைமாட்டுக் கொட்டேறி
  8. அரக்கு
  9. பிணம்
  10. விழல் என்னும் பேய்க்கரும்பு. இது நாணல், நாணாத்தட்டை எனவும் கூறப்படும்
  11. காட்டெருமை
  12. யானை மதத்தைக் குறிக்கும் கடாம் என்னும் சொல் கடான் என மயங்கும்
  13. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு மண் தின்னத் தோன்றும் ஆசை