மகலன கித்தி
மகலன கித்தி என்பவன், இலங்கையைச் சோழர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், மன்னனாக முடிசூட்டிக்கொண்டு ரோகணத்தில் இருந்து ஆட்சி செய்தவன் ஆவான். ஆறாம் கசபன் இறந்த பின்னர் சிறிதுகாலம் படைத்தலைவனாக இருந்த கித்தி என்பவன் ஏழு ஆண்டுகள் அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். மகலன கித்தி அவனைக் கொன்றுவிட்டு தானே அரசன் என முடிசூட்டிக்கொண்டு ரோகணத்தில் இருந்தான்.[1].இவனுக்கு பின் சோழருக்கு பயந்து அடைக்கலம் வேண்டி வந்த பாண்டிய இளவரசர்கள் சிங்கள அரசர்களாக முடி சுட்டி கொண்டனர் [2].
சோழருடன் போர்
தொகுஇவனது மூன்றாவது ஆட்சியாண்டில் சோழருடன் நிகழ்ந்த போரில் தோல்வி அடைந்த மகலன கித்தி, தன் கையாலேயே தனது தலையை வெட்டிக்கொண்டு இறந்துபோனான். சோழர்கள் மீண்டும் முடியையும் பிற செல்வங்களையும் எடுத்துச் சென்றனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 92
- ↑ Vikramabahu had no direct heirs to the throne, and ten years of internal disorganization and disunity followed his death. The Chola empire took advantage of the situation, putting three of the next five princes who assumed the throne to death. Immediately after Vikramabahu's death, his Senapathi Kitti assumed power. Kitti was deposed after eight days by Mahalanakitti, who bore the title "Chief Secretary" to Vikramabahu, but of whom little is known. He ruled for a further three years but fell in battle with the Chola. He was succeeded by a number of Indian princes as the Sinhalese were willing to follow anyone who would lead them to freedom from the Chola empire. However successive rulers left Ruhuna much worse off than before
- ↑ The Mahavansa, 1996, p. 92