மகளிர் உதவி அமைப்பு
மகளிர் உதவி அமைப்பு (Women's Aid Organisation) என்பது ஒரு மலேசிய அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இவ் அரசு சாரா தொண்டு நிறுவனம் பெண்களின் உரிமைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுகிறது. 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் மலேசிய மகளிர் உரிமைகள் இயக்கத்தில் பெண்கல்வி,சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மகளிர் உதவி அமைப்பு என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது மலேசிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் வழியாக வீடற்ற மற்றும் ஏழைப் பெண்களுக்கு உதவுகிறது. மேலும் இந்த குழு மலேசியாவின் உள்நாட்டு வன்முறைச் சட்டம் 1994 பரப்புவதில் ஈடுபட்டுள்ளது.
வரலாறு
தொகு1979 ஆம் ஆண்டில், மறைந்த டான் சீவ் சின் நாட்டிற்கு அவர் செய்த பங்களிப்புக்காக துன் ரசாக் விருது வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தங்குமிடம் அமைக்க ஆர்.எம் 30,000.00 ரூபாய் ரொக்க பணத்தை நன்கொடையாக வழங்கினார். புவான் சீறீ ஈ.என்.சோங் தலைமையில் சார்பு தேம் குழு சார்பாக 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கூட்டம் நடைப்பெற்றது. வீடுகளின் அடித்தளத்தை அமைப்பதற்கும் தொண்டர்களின் முக்கிய குழுவை உருவாக்குவதற்கும் ஒன்பது மாதங்கள் ஆனது. இந்த முன்னோடி தன்னார்வலர்கள் கொள்கைகளை வகுக்க ஒரு குழுவாக பணியாற்றினர்.மேலும் மகளிர் உதவி அமைப்பை நாடிய ஆதரவற்ற பெண்களுக்கு சுயஉதவி மற்றும் சுய-அதிகாரமளித்தல் போன்றவற்றில் உதவினர்..
மகளிர் உதவி அமைப்பு 1982 ஆம் ஆண்டு சூன் மாதம் தற்காலிக சமூகமாக பதிவு பெற்றது. மகளிர் உதவி அமைப்புக்காக மாடி வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமாகவும் மற்றும் அலுவலக வளாகமாக பயன்படுத்தியது. மலேசிய பத்திரிகை மலாய் மெயில் திட்டமிட்ட புகலிடம் பற்றிய முதல் கட்டுரையை வெளியிட்டது, விரைவில் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகளிர் உதவி அமைப்பு தனது முதல் குடியிருப்பு தங்குமிடத்தைப் பெற்றது
ஐவி சோசியா 15 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் உதவி அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருந்தார். சோசியாவிற்கு பிறகு சுமித்ரா விசுவநாதன் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிர்வாக இயக்குனரானார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தில் 16 ஆண்டுகளாக சுமித்ரா வழக்கறிஞர் மற்றும் மனிதாபிமான உதவித் தொழிலாளராக பணியாற்றினார்.[1]
நம்பிக்கை மற்றும் பணி
தொகுமகளிர் உதவி அமைப்பின் நம்பிக்கையின் படி யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை, அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. மேலும் அவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் நிலைமைகளின் மீது கட்டுப்பாடு அவசியமாகும். மகளிர் உதவி அமைப்பின் முக்கிய நோக்கங்கள் பெண்களுக்கு மரியாதை அளித்தல், ஊக்குவித்தல், பாதுகாப்பு மற்றும் பெண்களின் சம உரிமைகளைப் பூர்த்திசெய்தல் போன்றவையாகும். மேலும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழித்தல், குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் போன்றவைகளாகும்.[2]
முக்கிய சேவைகள் மற்றும் திட்டங்கள்
தொகுமகளிர் உதவி அமைப்பு மூன்று வெவ்வேறு மையங்களைக் கொண்டுள்ளது.அம் மையங்கள் அனைத்தும் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுகின்றன.
புகலிடம்
தொகுமகளிர் உதவி அமைப்பின் முதல் மையம் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதாகும். மேலும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தங்குமிடம் அமைத்துக் கொடுத்தல் ஆகும். கடந்த ஆண்டுகளில் இது தவறுகள் செய்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கடத்தப்பட்ட பெண்கள், புகலிடம் கோருவோர் மற்றும் ஆதரவற்ற தாய்மார்களுக்கு தங்குமிடமாகஇருந்தது. இப் பெண்களுக்கு உதவி வழங்கும் தொழில்முறை சமூக சேவையாளர்கள் உள்ளனர். மேலும் ஆலோசனை பெற விரும்புவோருக்கு முகநூல் ஆலோசனை அமர்வுகளையும் வழங்குகிறார்கள். ஆனால் ஆலோசனை பெறுபவர்கள் தங்குமிடம் செல்ல விரும்புவதில்லை. மகளிர் உதவி அமைப்பின் மூலம் குடும்ப வன்முறை, கற்பழிப்பு, பாலியல் தொல்லைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் பெண்களுக்கும், திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான கேள்விகளுக்கும் தொழில்முறை தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கப்படுகிறது. சமூக சேவையாளர்களால் ஆண்டுக்கு கையாளப்படும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை சராசரியாக 1,500 ஆகும்.[3]
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் உதவி அமைப்பு முதல் நேரடி குருஞ்செய்தி உதவி மையத்தை ஆரம்பித்தது. டினாவிம் மூலம் உள்நாட்டு வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைப்பவர்களுக்கும், நெருக்கடியில் இருக்கும் பெண்களுக்கும் ஆதரவளித்தது. 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் மகளிர் உதவி அமைப்பின் தேசிய பிரச்சாரமான தவறை தவிர்க்கவும் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக டினா தொடங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ s. indramalar (27 February 2015). "Introducing Sumitra Visvanathan, the new executive director of WAO - People | The Star Online". Thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
- ↑ "About Us - Women's Aid Organisation". Wao.org.my. Archived from the original on 13 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy". Archived from the original on 17 மார்ச்சு 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "'TINA', the first SMS helpline for domestic abuse Survivors is in Town - Women's Aid Organisation". Wao.org.my. Archived from the original on 13 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)