மகள் மறுத்தல்
மகள் மறுத்தல் என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் 3 உள்ளன. புறநானூறு 109, 110, 111 இது நொச்சித்திணையில் வரும் துறை.
வேள் பாரி தன் மகளை யாருக்குத் தருவான் என்று கபிலர் கூறும் பாடல்கள் இவை.
இந்தப் பாடல்களால் மூவேந்தர் கூடிப் பாரியின் பறம்பு மலையை முற்றிகை இட்டுப் பாரியை அழித்தது பாரியின் மகளை மணப்பதற்காகவே எனத் தெரிகிறது.
பாரி தன் நாட்டை ஆடிப் பாடி வரும் விறலியர்க்கு நல்குவான். வேந்தர்க்கு விட்டுக்கொடுக்க மாட்டான். [1] தன் நாட்டின் 300 ஊர்களையும் பரிசிலர்க்குக் கொடுத்துவிட்டான். எஞ்சியிருப்பது குன்று, பாரி, புலவர் ஆகியவையே, இவற்றை வேந்தர்க்குத் தரமாட்டான். [2] இந்தக் குன்றத்தையும் பாடிவரும் கிணைமகள் பெறமுடியும். [3]
- மகட்பாற்காஞ்சி என்னும் துறையில் வரும் பாடல்களில் மகளின் தந்தை இன்னான் என்றோ, அவளை மணக்க வரும் வேந்தன் இன்னார் என்றோ பெயர் கூப்பட்டிருக்காது.
- மகள் மறுத்தல் என்னும் துறையில் வரும் பாடல்களில் மகளின் தந்தை இன்னார் எனக் காட்டப்பட்டிருக்கும்.
இவை இது துறைகளில் காணப்படும் வேறுபாடு.