மகாத்மா காந்தி சிலை, காந்தி மைதானம்
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை (Statue of Mahatma Gandhi, Gandhi Maidan) இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னமாகும். இந்த சிலையானது உலகில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் சிலைகளில் மிக உயரமான வெண்கலச் சிலை ஆகும். இதனைப் பிப்ரவரி 15, 2013 அன்று பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமாரால் திறந்துவைக்கப்பட்டது.[1] இந்த சிலை பீகார் அரசால் ₹ 35 கோடி செலவில் நிறுவப்பட்டது.[2] இரண்டாவது மிக உயரமான காந்தி சிலை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா வட்டத்தில் துருவானூரில் அமைந்துள்ளது.
நின்ற நிலையில் இரு சிறுவர்களுடன் காந்தி | |
ஆள்கூறுகள் | 25°37′7″N 85°8′33″E / 25.61861°N 85.14250°E |
---|---|
இடம் | காந்தி மைதானம், பாட்னா, பீகார், இந்தியா |
வடிவமைப்பாளர் | அனில் சுடர் |
வகை | சிலை |
கட்டுமானப் பொருள் | வெண்கலம் |
உயரம் | 22 மீ |
துவங்கிய நாள் | 2012 |
முடிவுற்ற நாள் | 2013 |
திறக்கப்பட்ட நாள் | 15 பிப்ரவரி 2013 |
அர்ப்பணிப்பு | மகாத்மா காந்தி |
விளக்கம்
தொகுஇந்த சிலையானது 72 அடிகள் (22 m) உயரமானது. உயரமான 24 அடி பீடத்தில் அமைக்கப்பட்ட இச்சிலையானது வெண்கலத்தால் ஆனது. இது ராம் வி சூதார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இச்சிலை பாட்னாவில் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி மைதானத்தின் மேற்கு முனையில் அமைந்துள்ளது.[3] மகாத்மா காந்தி இரண்டு குழந்தைகளுடன் பாசத்துடன் நிற்பதாக இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தை இது காட்டுகிறது. 24அடி உயரப் பீடத்தில் காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளான, தண்டி உப்புச்சத்தியாகிரகம் (1930), வெளியேறு இந்தியா இயக்கம் (1942), சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகம் (1917) மற்றும் காந்தியின் அடையாளமாக நூற்புச் சக்கரம்ஆகியவை பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.[4]
இராம்சுதார் கலை நிறுவனம் நடத்தும் சிற்பி அனில், "புன்னகையுடன் காட்சியளிக்கும் காந்தி, உலக அமைதியின் செய்தியினையும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிரிவைக் குறைக்க அனைவரையும் ஊக்குவிக்கும்" என்றார்.[5]
படக்காட்சி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "World's Tallest Statue of Mahatma Gandhi Unveiled in Patna". PatnaDaily.Com. 2013-02-15. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
- ↑ "Tallest Gandhi statue to be installed at Patna – The Times of India". Timesofindia.indiatimes.com. 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
- ↑ "Gandhi vs Gandhi: Two statues of the Father of the Nation are getting differential treatment in Patna". PIYUSH KUMAR TRIPATHI. The Telegraph (Calcutta), Patna. 13 September 2013. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ "Mahatma Gandhi's tallest statue unveiled – The Times of India". Timesofindia.indiatimes.com. 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
- ↑ PTI (2013-02-15). "World's tallest Gandhi statue unveiled in Patna". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.