ராம் வி சூதார்
இந்தியக் கலைஞர்
ராம் வஞ்சி சூதார் (பிறப்பு 19 பிப்ரவரி 1925) என்பவர் ஒரு இந்திய சிற்பி ஆவார். அவர் தனது சிற்பக்கலை தொழிலின் கடைசி நாற்பது ஆண்டுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நினைவுச்சின்ன சிற்பங்களை உருவாக்கியுள்ளார். அவர் கலைத்துறையில் அளித்துள்ள பங்களிப்புக்காக 2016 ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1999 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். அவரே 182 மீட்டர் உயரத்தில் (597 அடி) இளவேனில் கோயிலின் புத்தர் சிலையை விட 54 மீட்டர் கூடுதலான உயரத்துடன் இருக்கும் வண்ணம் உலகின் மிக உயரமான சிலையான "ஒற்றுமைக்கான சிலையை (Statue of Unity)" வடிவமைத்தார்.[1]
ராம் வி சூதார் | |
---|---|
பிறப்பு | 19 பெப்ரவரி 1925 Gondur, துளே மாவட்டம், மகாராஷ்டிரா, இந்தியா |
- ↑ "India unveils world's tallest statue". BBC News. 31 October 2018. https://www.bbc.com/news/world-asia-india-46028342.